சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்படும் நகரங்களின் பட்டியல் குறித்த ஆய்வு நடைபெற்றது. அதில் மகாராஷ்டிராவின் புனே நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சென்னை மாநகரமானது 19-வது இடத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்படும் நகரங்களின் பட்டியல் குறித்த ஆய்வு ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர். ஏ.எஸ்.ஐ.சி.எஸ்(ASICS) எனப்படும் இந்த அமைப்பு இந்த ஆண்டு இந்தியாவில் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில் 20 மாநிலங்களில் உள்ள 23 நகரங்களில் நிர்வாகம், சுகாதாரம்,சட்டம் ஒழுங்கு, கொள்கைகள், செயல்பாடு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 


இந்த ஆய்வில் மகாராஷ்டிராவின் புனே நகரம் 10-க்கு 5.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 


மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முறையே 2,3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளன. 3.3 மதிப்பெண்களுடன் சென்னை 19-வது இடத்திலும், 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி இடத்திலும் உள்ளது.


இந்த ஆய்வில் ஒவ்வொரு நகர நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நகரங்களில் மனிதவள மேம்பாடு சரியில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 



சில நகரங்களில் சரியான வேலைக்கு சரியான ஆள் நியமிக்காமை, ஊதியம் முறையாக வழங்கப்படமை ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் அதை சரிசெய்வதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.