விஷால் பதவி விலக வேண்டும்-ராதாரவி, டி.ராஜேந்தர் பேட்டி!!
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் பதவி விலக வேண்டும் என்று ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கூட்டாகப் பேட்டியளித்துள்ளனர்!
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் பதவி விலக வேண்டும் என்று ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கூட்டாகப் பேட்டியளித்துள்ளனர்!
விஷால் நடிகர் சங்க தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்கள் நிர்வாகிகளாக வேண்டும் என்றும், 45 நாள் திரைப்பட துறையினர் ஸ்டிரைக்கால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என்றும், வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து டி.ராஜேந்தர், ,,, எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி? பதில் சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுபியுள்ளார்.
அதேபோன்று ராதாரவி கூறுகையில்..!
தமிழ் ராக்கர்ஸ்-வுடன் ‘டீல்’ பேசியதாக வெளியான தகவல் பற்றி இதுவரை விஷால் வாய்திறக்காதது ஏன்? என்றும், தனது இரும்புத்திரை படத்தை வெளியிடும் முயற்சியிலேயே விஷால் இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.