தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் தலித்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அவர்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் என குற்றம்சாட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி. எனவே இந்திய அரசியலமைப்பை காக்கக் கோரி பிரசார இயக்கம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், டெல்லியில் இன்று தால்கட்டோரா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அரசியலமைப்பை காப்போம்” என்ற பிரசார இயக்கத்தை  தொடங்கிவைத்தார்.


பின்னர் அவர் கூறியதாவது:- ஏழைகளையும், தலித் மக்களையும் மோடி மறந்து விட்டார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் இதயத்தில் தலித் மக்களுக்கு இடம் இல்லை. மத்திய அரசின் கொள்கையில் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் இதைப்பற்றி எதுவும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறா். நாடாளுமன்றத்த்தில் நான் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். அவர் வாய் திறப்பாரா? 


மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய சுலோகம் 'பேட்டி பச்சோ, பிஜேபி கே லோகோன் சே பச்சோ' (பெண்களை காப்போம், பிஜேபி-யிடம் இருந்து பெண்களை காப்போம்) என தாக்கி பேசியுள்ளார்.


"பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் & பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" (Beti Bachao, Beti Padhao) என்ற பிஜேபியின் சுலோகத்தை ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.