துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்றுள்ள ரஜினிகாந்த் தற்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று காலை தூத்துக்குடி வந்தடைத்தார் ரஜினிகாந்த் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியும், அதேபோல காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம்  நிதியுதவி அளிக்கபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் அவர் தற்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர். 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை சமூக விரோதிகளே என்றார். 


தொடந்து பேசிய அவர், இனிமேல் இத்தகைய நிகழ்வு நடைபெற கூறாது. சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஸ்டெர்லைட் நீதிமன்றம் சென்றால் அது மனித தன்மையற்ற செயல் என்று தெரிவித்தார். தனி நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.