நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்  என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்று தொடர்ந்ததுடன் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். 


ரஜினிகாந்த் தெரிவித்த இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் பர்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்-ன் தெரிவித்துள்ள கருத்து குறித்து இன்று விமான நிலையம் வந்த தமிழக சமத்துவக்கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,


மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும்,  கலவரத்தில் சமூக விரோதிகள் எனக் கூறும் ரஜினி, அவர்களை பற்றிய விவரங்களை ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.