நடிகரும், அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் பிராத்தனை செய்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். 


இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.



இதையடுத்து, வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலாதிரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், நடிகரும், அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் பிராத்தனை செய்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.


காஷ்மீரில் உள்ள குகைக்கோவிலுக்கும் ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக்கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார். இந்தநிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று வழிபாடு செய்தார். 


இதையடுத்து, இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசி பெறுகிறார்.