சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித்கான் இணைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடைப்பெற்ற IPL தொடரில் தன் சுழற்பந்துவீச்சின் திறமையால் பல இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டவர் ரஷித்கான். இவர் தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை பெற்ற வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.


இதற்கு முன்னதாக இவர் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளை பெற்ற வீரர் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


டேராடூனில் நேற்று நடைப்பெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரஷித்கான், டி20 போட்டியில் இந்த சாதனையினை பதித்துள்ளார்.


இவருக்கு முன்னதாக டி20 போட்டிகளில் மிகவிரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை இலங்கை சேர்ந்த மென்டிஸ் தக்கவைத்திருந்தார். 26 போட்டிகளில் இந்த சாதனையை மென்டிஸ் பெற்றார், இவரையடுத்து தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 31 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு இணையாக ரஷித்கான் 50 விக்கெட்டுகளை 31 போட்டிகளில் பெற்றுள்ளார்.


இவர்களை அடுத்து 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் (35 போட்டி), பாகிஸ்தானின் உமர் குல்(36 போட்டி), சயித் அஜ்மல்(37 போட்டி) என முறையே 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.