நேரடியாக கடன் பத்திரம் விற்பனையில் RBI வங்கியின் உத்தரவுகளை பின்பற்றாததால் ICICI வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதத் தொகை கடன் விதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICICI வங்கியின் ஒழுங்கு முறை இணக்கத்தில் நிலவும் குறைபாடுகள், எந்த பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தம் எத்தனை காலம் வரை செல்லும் என வாடிக்கையாளர்களுக்கு முறையாக அறிவுறுத்தாதது போன்றவைகளுக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக RBI  வங்கி விளக்கம் அளித்துள்ளது.


ஒழுங்குமுறை இணக்கத்தன்மை குறைபாடுகளை அடிப்படையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக RBI தெரிவித்துள்ளது. மேலும் ICICI  வங்கி அதன் விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க தவறியது என்பது பற்றிய அறிவிப்பு மத்திய வங்கியால் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.