என்.ஆர்.ஐ திருமணங்களை 48 மணி நேரத்தில் பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் மற்றும் விசா ரத்து செய்யப்படும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில், பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவே 1969-ம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெளிவான ஆலோசனை இல்லை. 


இந்நிலையில், வெளிநாட்டில் பணிபுரியும் கணவர்களால் இந்திய பெண்கள் கைவிடப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 48 மணி நேரத்தில் NRI திருமணத்தை பதிவு செய்யாவிட்டால், அவர்களது பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யபடுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 



இதை மீறி அவர்கள் NRI திருமணத்தை பதிவு செய்ய தவறினால் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீசும் அனுப்பப்படும். இது குறித்து அனைத்து பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.