நாள் ஒன்றுக்கு 5GB டேட்டா; Jio அதிரடி சலுகை!
இலவச டெலிக்காம் சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ தற்போது 5GB டேட்டா திட்டத்துடன் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது!

கவர்சியான திட்டங்களை தொடர்ந்து வழங்கிவரும் Jio தற்போது இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4GB, 5GB இலவச டேட்டாக்களை வழங்குகிறது.
Plan 1: Rs 509...
ரூ.509 திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ-வானது 112GB மொபைல் டேட்டாக்களை வழங்குகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 4GB டேட்டா வழங்குகிறது.
28 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு கட்டணங்களை பொறுத்தவரை, அனைத்து லோக்கல் மற்றும் STD அழைப்புகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தினமும் 100 இலவச SMS களும் வழங்குகிறது ஜியோ.
Plan 2: Rs 799...
ரூ.799 திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ-வானது 140GB மொபைல் டேட்டாக்களை வழங்குகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 5GB டேட்டா வழங்குகிறது.