போக்குவரத்து ஊழியருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானது!
போக்குவரத்து ஊழியருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்..!
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். ஜனவரி 5-ம் தேதி மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகவும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தும், ஓட்டுநர், நடத்துநர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இதையாடுத்து, தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த முடிவால் பெரிது மக்கள் பாதித்தனர்.
இதையடுத்து, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து, நீதியரசர் பத்மநாபனின் அறிக்கையை ஏற்று அரசிதழில் இதை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது..!