தவறாக நடந்துக்கொண்ட காவலரை கன்னத்தில் அறைந்த இளம்பெண்!
ஹரியானாவின் ரோத்தக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்துக்கொண்ட காவலரை கண்ணத்தில் அறைந்து தகுந்த பாடம் கற்பித்துள்ளார்!
ஹரியானாவின் ரோத்தக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்துக்கொண்ட காவலரை கண்ணத்தில் அறைந்து தகுந்த பாடம் கற்பித்துள்ளார்!
ஹரியானவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒரவர் நேற்று இரவு 8 மணியளவில் தன் வீட்டிற்கு Share Auto மூலம் பயணித்துள்ளார். வழியில் அந்த ஆட்டோவில் இணைந்த காவலர் ஒருவர் இந்த பெண் தனியாக இருப்பதினை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
ஆராம்பத்தில் தன்னுடைய காதலியாக இருக்குமாறு கேட்ட அந்த காவலர், அவரை கட்டாயப்படுத்தி அவரது கைப்பேசி எண்ணை கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த இளம்பெண் காவலரின் கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
சம்பந்தப்பட்ட காவலரின் மீது வழக்குப்பதியப் பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ரோத்தக் காவல் ஆணையர் தெரிவிக்கையில்... விவரம் அறிந்து காவல்நிலையம் வந்த அப்பெண்ணின் தந்தை வழக்கை பதியவேண்டாம் என கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கு கைவிடப்பட்டது. எனினும் சம்பந்தப்பட்ட காவலர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்வத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கராத்தே கற்றவர் எனவும், அவர் மாவட்ட அளவில் தங்கம் மற்றம் மாநில அளவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.