மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணையும் விட்டு வைக்காத காமுகர்கள்!!
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு சென்ற மின்சார ரயிலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்!
நாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு சென்ற மின்சார ரயிலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ்(25) என்பவர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணினின் தனிமை நிலை அறிந்த சத்யராஜ் என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்த அதே ரயிலில் அடுத்த பெட்டியில் பயணம் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் சிவாஜி என்பவர் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை ஐஜி.பொன்மாணிக்கவேல் என்பவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.