21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வருகிறது. 71 நாடுகள் பங்கேற்று வரும் இந்த போட்டிகளில் பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நடைபெற்ற  பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதியின் பைனலில் செய்னா, சிந்து பலப்பரீட்சை நடத்தினர். இருவருக்கும் இப்போட்டி கடும் சவாலாக இருந்தது. இந்த போட்டியில் தங்கம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


எனெனில், முன்னதாக, காமன்வெல்த் பெண்கள் பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டியை 21-14, 18-21, 21-17 என, வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, கனடாவின் மிட்செல்லியை 21-18, 21-8 என, வீழ்த்தினார்.


இந்நிலையில், இன்று நடைபெற்ற பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதியின் பைனலில் செய்னா நேவால், சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.


இந்நிலையில் தற்போது இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 62 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் தொடரந்து நீடித்து வருகிறது.