திருச்சி சமயபுரம் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொண்ட இன்று நடை திறக்கப்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொண்ட இன்று நடை திறக்கப்பட்டது.
திருச்சி மாநாகரில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் யானைக்கு நேற்று திடீரென மதம் பிடித்தது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள பக்தர்கள் அலரியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் மதம் பிடித்த யானை மசினி-யை அடக்க முயன்ற யானை பாகன் கஜேந்திரன் யானையிடம் மிதிப்பட்ட பலியாகினார். இச்சம்பவத்தில் கோவில் வந்திருந்ந பக்தர்களில் 8 போ் காயமடைந்தனா். மேலும், அந்த பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 போ் கவலை கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து பாகனை கோயில் யானை மசினி மிதித்து கொன்றதால், நேற்று காலை 11 மணி முதல் கோயில் நடை சாத்தப்பட்டது இருந்தது. இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில், புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொண்ட மீண்டும் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது.