சேலம் வழியாக தஞ்சைக்கு செல்லும் சசிகலா!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வருகிறார்.
சசிகலா தனது கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முன்னும் பின்னும் நான்கு கார்கள் அணி வகுக்க, சேலம் வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சிகிச்சை முடிந்து நவம்பரில் வீடு திரும்பினார்.
இந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் மார்ச் 16-ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவகள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 20) நள்ளிரவு சரியாக 1.35 மணிக்கு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பெசன்ட்நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நடராஜன் உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான விளாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா 15 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டு உள்ளது.
பரோலில் சசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ள 3 நிபந்தனைகள்....!
பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது என்பவையாகும்.
எண் 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதை தொடர்ந்து, பெங்களூரில் இருந்து புறப்பட்ட சசிகலா தனது கணவனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்தில் உள்ள விளார் கிராமத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.