தலை முடியை காரணம் காட்டி 3-ஆம் வகுப்பு மானவி ஒருவர் தன் பள்ளியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லெயிலா சைஸ்கானி, காலிப்போனியா ப்ரசினோ-வை சேர்ந்த 8 வயது சிறுமி. தனக்கு பிடித்த "fro hawk" சிகை அளங்காரத்தினை வெட்டிக்கொண்டதால் தான் பயிலும் பள்ளியில் இருந்து அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து அவரது தாயார் தாரா சைஸ்கானி தெரிவிக்கையில்... சமீபத்தில் லெயிலா சைஸ்கானி youtube-ல் ஒரு மியூசிக் வீடியோவினை பார்த்துள்ளார். 


அந்த வீடியோவில் இடம்பெற்ற கலைஞர் வைத்திருந்த சிகை அளங்காரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் தானும் அதே சிகை அளங்காரத்தினை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தன் மகளின் ஆசையினை நிரைவேற்ற தானும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் பின்னர் பள்ளி சென்ற லயலா ஸைசோங்கியை பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியில் அனுமதிக்க மறுத்துள்ளது.



இதற்கு லெயிலா சைஸ்கானியின் சிகை அளங்காரத்தினை காரணம் காட்டியுள்ளது பள்ளி நிர்வாகம். அவரது தாய் பலமுறை முறையிட்டும் தங்களது பள்ளி கோட்பாட்டினை மீற முடியாது என தெரிவித்துவிட்டது.


இறுதியாக லெயிலா சைஸ்கானியின் முடியை முழுவதுமாக வெட்ட வேண்டும், அல்லது அவரை பள்ளியில் இருந்து நீக்க நேரிடும் என தெரிவித்துள்ளது பள்ளி நிர்வாகம். இதனையடுத்த தனது மகளின் விருப்பம் தான் முக்கியம் என கூறி தன் மகளை கடந்த 7 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றார் தாரா சைஸ்கானி!