பள்ளி மாணவர்களை கொண்டு விளம்பரம் தேடும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவுடைந்துள்ள நிலையில் விரைவில் தேர்வு முடிவுகளும் வெளியாக காத்திருக்கின்றன. குறிப்பாக வரும் மே 16-ஆம் நாள் 12-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று பள்ளி கல்விதுறை அறிவித்துள்ளதாவது... "பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்டு தங்கள் பள்ளிகளுக்கு விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது. 


இந்த அறிவிப்பினை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


மேலும், நாள் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 1-ஆம் நாள் பள்ளிகள் திரக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் தயாரன நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொன்டுள்ளார்.


இதன்படி பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் இருக்கும் புதர்கள், கழிவு பொருட்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்!