இயற்கையாக வரும் முதுமை உங்கள் தன்னம்பிக்கையைக் குறைக்கிறதா? கவலைப்பட வேண்டாம்!! இஸ்ரேலிய விஞ்ஞானிகளின் கூற்றுபடி, விரைவில் நம்மால் வயதாகும் செயல்முறைகளை மாற்றியமைக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்படி என்று கேட்கிறீர்களா? வெறும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி இதை செய்து விடலாம் என அடித்துக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.


டெல் அவிவ் (Tel Aviv) பல்கலைக்கழகம் மற்றும் ஷமிர் மருத்துவ மையத்தின் விஞ்ஞானிகள் முதுமை அடையும் செயல்முறையை நிறுத்துவது மட்டுமல்லாமல், ஒரு அறையில் உயர் அழுத்த மட்டத்தில் ஆக்ஸிஜனை (Oxygen) வழங்கி, முதுமையடையும் தன்மையை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகின்றனர். அல் ஜசீராவின் படி, இந்த செயல்முறை, முதுமை மற்றும் நோயுடன் தொடர்புடைய இரண்டு செயல்முறைகளை மாற்றியமைத்தது.


ஆய்வில் ஈடுபட்ட இஸ்ரேலிய (Israel) விஞ்ஞானிகளில் ஒருவர் - டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷாய் எஃப்ராடி தி ஜெருசலேம் போஸ்ட்டிடம், முதுமைக்கு காரணமான செல்லுலார் அடிப்படையை மாற்றியமைக்க முடியும் என்று கூறினார்.


இந்த ஆராய்ச்சியை ஒரு "ஹோலி கிரெயில்" என்று அவர் குறிப்பிட்டார். "டெலோமியர் ஷார்டெனிங் முதுமை தொடர்பான உயிரியலின் ஹோலி கிரெயில் என்று கருதப்படுகிறது" என்று அவர் ஜெருசலேம் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.


விஞ்ஞானிகள் "டெலோமியர் நீட்டிப்பை" வெற்றிகரமாக அடைய முடிந்தது என்று அவர் கூறினார். இதனால் செல்லுலார் மட்டத்தில் முதுமைத் தன்மையை (aging) மாற்றியமைக்க முடிந்தது.


அற்புதமான இந்த ஆராய்ச்சி முடிவுகள், இளம் விஞ்ஞானிகள் முதுமையை ஒரு பெரிய குறைபாடாக கருதாமல் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகப் பார்க்க உதவும் என்றார் அவர்.


ALSO READ: ஆஸ்துமாவை குணமாக்கும் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரம்


ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானியான ஷமிர் மருத்துவ மையத்தைச் சேர்ந்த அமீர் ஹடன்னி, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியில் ஏற்படும் மாற்றங்கள் முதுமையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, ஆனால் ஆக்ஸிஜன் அடிப்படையிலான சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்.


 "தற்போது இருக்கும் வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை விட, HBOT இன் மூன்றே மாத செயல்முறையால் மிகவும் மேன்மையான விகிதத்தில் டெலோமியர்களை நீட்டிக்க முடிந்தது என்பதை எங்கள் ஆய்வுகள் காட்டின" என்று ஹடன்னி கூறினார்.


அவர்களின் உடல் ரீதியான மாற்றங்கள், குறைந்தபட்சம் செல்லுலார் அடிப்படையில் 25 வயது முதிர்ச்சியை மாற்றியமைத்தன, என்று ஆய்வு கூறியது.


இந்த ஆராய்ச்சி வயதைக் குறைத்து காட்டுவது பற்றியது மட்டுமல்ல, மாறாக, வயதை பின்னோக்கி எடுத்துச் செல்வது பற்றியது என்றும் ஆய்வு கூறியுள்ளது. 


ALSO READ: உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் உடலில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR