ஒரு நட்சத்திரத்தின் இறப்பு இவ்வளவு அழகாய் இருக்குமா? இது Supernova புகைப்படம்
Supernova Image: நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது
நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது. சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரத்தின் உண்மையான வெடிப்பு! ஒரு நட்சத்திரம், தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை அடையும் போது, அது வெடித்து சிதறுகிறது. அதன் அளவைப் பொறுத்து, விண்வெளியில் அனைத்து திசைகளிலும் அதன் ஆற்றல் சிதறுகிறது.
ஒரு நட்சத்திரம் வெடிக்கும்போது, அது வெளியிடும் எச்சங்களை ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து பார்க்க முடியும். அதுபோன்ற ஒரு சூப்பர்நோவாவின் வெடிப்புச் சிதறல்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
இந்தப் புகைப்படத்தில், நள்ளிரவின் காரிருளில், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பிண்ணனியில் பிரகாசமாக ஜொலிக்கும் வண்ணமயமான சூப்பர்நோவா புகைப்படம் மனதை மயக்குகிறது.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?
நாசாவின் சந்திரா எக்ஸ்ரே அப்சர்வேட்டரி தொலைநோக்கி மூலம், இந்த சூப்பர்நோவா புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை நாசா விண்வெளி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
"இந்த புகைப்படம் பூமியில் இருந்து சுமார் 9,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சூப்பர்நோவாவின் எச்சங்களைக் காட்டுகிறது, @NASACHandraXRay ஆல் கண்டறியப்பட்ட எக்ஸ்-ரே ஒளியின் மூன்று பட்டைகளில், குறைந்த ஆற்றல் X-கதிர்கள் சிவப்பு நிறத்திலும், நடுத்தரமான பச்சை நிறத்திலும், மிக உயர்ந்த நீல நிறத்திலும் உள்ளன. ," என்று நாசா தனது பதிவில் தெரிவித்துள்ளது.
"பட விளக்கம்: #Midnight போன்ற கருப்பு போன்ற வெற்று இடம் படம் முழுவதும் சிறிய வெள்ளை நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது. நீலம், பச்சை, மஞ்சள், ஊதா மற்றும் சிவப்பு நிறங்கள், நியூட்ரான் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள புகைப்படத்தின் மையத்தை பிரகாசமாக உருவாக்குகிறது" என்று நாசா எழுதியது.
மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்
நாசா பகிரும் விண்வெளியின் அழகிய புகைப்படங்களை ரசிக்கும் மக்கள், இந்த சூப்பர்நோவா புகைப்படத்தையும் ரசித்துள்ளனர். இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் படத்தை லைக் செய்துள்ளனர்.
நாசாவின் இந்த சூப்பர்நோவா புகைப்படத்தை பார்த்து, லைக் போட்ட நெட்டிசன்கள், பாராட்டு மழையைப் பொழியும் விதமாக கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். விண்வெளியின் இரவு நேரம் புதிய நிறத்தில் இருக்கிறது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்
"இது மிகவும் அழகாக இருக்கிறது. நமது பிரபஞ்சம் எவ்வளவு அழகானது என்பதை ஒரு நட்சத்திரத்தின் இறுதி அழகாக சொல்கிறது" என்று மற்றொருவர் கூறினார்.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ