நைட் ஷிஃப்டில் வேலை செய்வது என்பது தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. ஆனால் அது இயல்புக்கு மாறானது, இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் வரும் என்று அறிவியல் ஆய்வு ஒன்று திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (atrial fibrillation) எனப்படும் ஒழுங்கற்ற மற்றும் அடிக்கடி அசாதாரணமான இதய துடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தலைமையிலான ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டன.


இரவு ஷிப்ட் வேலைக்கும் AF க்கும் இடையேயான தொடர்பை ஆராய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இங்கிலாந்தின் பயோ பேங்க் தரவுத்தளத்தில் இருந்து பெறப்பட்ட 283,657 நபர்களின் தகவல்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நீண்ட நாட்கள் மற்றும் அடிக்கடி இரவு நேர ஷிப்டில் பணியாற்றியவர்களுக்கு இதய துடிப்பில் மாறுதல்கள் இருப்பதையும், குறிப்பாக பெரும்பாலானவர்களுக்கு இதயம் வேகமாக துடித்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
 
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு இதய நோய்க்கான அதிக ஆபத்து இருந்தாலும், பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு என்ற பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை என்றும் ஆய்வாளார்கள் தெளிவுபடுத்துகின்றனர். 


Also Read | 3rd Dose of Corona Vaccine: மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவை?


சீனாவின் ஷாங்காயில் உள்ள Shanghai Ninth People`s Hospital and Shanghai JiaoTong University School of Medicine கல்லூரியில் பணிபுரியும்   பேராசிரியர் யிங்லி லூ (Professor Yingli Lu) மற்றும் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள  Tulane University School of Public Health and Tropical Medicine கல்லூரிப் பேராசிரியர் லு குய் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.


இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் இதய பிரச்சனைகளுடன் தொடர்புடைய 166 மரபணு மாறுபாடுகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த மரபணு அபாயத்தை ஆய்வுக் குழுவினர் மதிப்பீடு செய்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வம்சாவளியில் இதய பாதிப்பு தொடர்பான அபாயம் குறைவாக இருந்தாலும், அது இரவு வேலை செய்பவர்களுக்கு எந்த அனுகூலத்தையும் வழங்கவில்லை என்பதை கண்டறிந்தனர்.
 
பேராசியர் லூவின் கூற்றுப்படி "இது போன்ற ஒரு ஆய்வில் இரவு நேர மாற்றங்கள் மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் மற்றும் இதய நோய் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை துல்லியமாக சொல்லிவிட  முடியாது என்றாலும், வாழ்நாள் முழுக்க இரவு ஷிப்ட் வேலை செய்வதும், அடிக்கடி இரவு நேர பணியில் ஈடுபடுவதும் இந்த நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன".  


Also Read | Corona Vaccine: கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்


இரவு ஷிப்ட் வேலை பார்ப்பதையும், அதன்  கால அளவைக் குறைப்பதும் இதயம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இந்த ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 283,657 பேருக்கு UK பயோ பேங்கில் சேரும்போது AF இல்லை, மற்றும் 276,009 பேருக்கு இதய செயலிழப்பு அல்லது பக்கவாதம் இல்லை. AF இல்லாமல் 193,819 பங்கேற்பாளர்களுக்கு மரபணு மாறுபாடுகள் பற்றிய தகவல் கிடைத்தது. 2015 இல் அவர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டு தொடர்ந்து தரவுகள் பெறப்பட்டன. அதில் 75,391 பேர் ஆழமான கேள்விகளுக்கு பதிலளித்தனர் 


பத்து ஆண்டுகளுக்கும் மேலான சராசரி தரவுகளின் அடிப்படையில், 5,777 பேருக்கு இதயத் துடிப்பு அதிகரித்திருந்தது. இந்த வித்தியாசமானது, வயது, பாலினம், இனம், கல்வி, சமூக பொருளாதார நிலை, புகைபிடித்தல், உடல் உடற்பயிற்சி, உணவு போன்ற முடிவுகளை பாதிக்கும் என்பதால், அதன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பகுப்பாய்வுகளை சரிசெய்தனர். உடல் நிறை குறியீட்டெண், ரத்த அழுத்தம், தூக்க காலம் ஆகியவை இந்த தரவுகளில் பெறப்பட்டன.


Also Read | Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


பகலில் மட்டும் வேலை செய்யும் நபர்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அடிக்கடி அல்லது நிரந்தர அடிப்படையில் இரவு நேர வேலை செய்யும் மக்களுக்கு ஏஎஃப் ஆபத்து 12 சதவீதம் அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.


பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இரவுப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து 18 சதவீதமாக அதிகரித்தது. பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் மாதத்திற்கு சராசரியாக மூன்று முதல் எட்டு இரவு வேலைகளில் பணிபுரிந்தவர்களில், பகல்நேர ஊழியர்களுடன் ஒப்பிடும்போது AF இன் ஆபத்து 22 சதவீதமாக அதிகரித்துள்ளது.


பகல்நேரத்தில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேரத்தில் பணிபுரிந்தவர்கள் தொடர்பாக மேலும் இரண்டு சுவாரசியமான கண்டுபிடிப்புகள் இருந்தன. பத்து வருடங்களுக்கும் மேலாக இரவு வேலை செய்யும் போது ஆண்களை விட பெண்களுக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அதிகமாகிறது. பகல்நேரத்தில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது இரவு நேரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 64% ஆபத்து அதிகரித்துள்ளது.


எங்கள் ஆய்வின் இறுதியில் பெண்கள் மற்றும் குறைவான உடல் உழைப்பு உள்ளவர்கள் இரவு ஷிப்ட் வேலையை குறைப்பதன் மூலம் இதயத் துடிப்பு அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  


Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR