புதுடெல்லி: இரண்டு கால்களைக் கொண்ட கோழி அளவிலான டைனோசரை (dinosaur) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயிருள்ள பூச்சிகளையும், தவளைகள் மற்றும் பல்லிகள் போன்ற சிறிய முதுகெலும்பு கொண்ட விலங்குகளையும் வேட்டையாடிய சிறிய ரக டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சுமார் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசரின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடகிழக்கு பிரேசிலில் (Brazil) உள்ள பழங்கால நீர்நிலை ஒன்றின் கரையில் இந்த டைனோசரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது சாதாரணமானது, ஜுராசிக் காலத்தில் இருந்த சிறிய டைனோசர்கள் (Dinosaur) பலவற்றைப் போன்றதுதான் இதுவும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  சிறிய ரக டைனோசரின் எலும்புக்கூடு (skeleton) கிடைத்திருப்பது பல முக்கிய ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


உபிராஜாரா ஜுபாடஸ் (Ubirajara jubatus) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், முடி போன்ற கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது.  இந்த கோழியைப் போன்ற டைனோசரின் முடிகள் வித்தியாசமானவை. கெராட்டினால் செய்யப்பட்ட முற்றிலும் தனித்துவமான, கடினமான, ரிப்பன் போன்று இருந்தது.  முடி மற்றும் விரல் நகங்களை (fingernails) உருவாக்கும் கெராட்டினால் உருவாக்கப்பட்ட அந்த ரிப்பன் போன்ற முடி அமைப்பு, அதன் தோள்களில் இருந்து நீண்டு காணப்படுகிறது.


உபிராஜாரா ஜுபாடஸ்-இன் (Ubirajara jubatus) இந்த முடி போன்ற கட்டமைப்புகள் புரோட்டோஃபெதர்ஸ் (protofeathers) எனப்படும் இறகுகளின் அடிப்படை வடிவமாகத் தோன்றுகின்றன. இது உண்மையான முடி அல்ல, பிரத்தியேகமாக பாலூட்டிகளுக்கு இருக்கும் ஒரு தனிச்சிறப்பான அம்சமாகும். பல டைனோசர்களில் இறகுகள் இருந்தன. உண்மையில், பறவைகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறிய இறகுகள் கொண்ட டைனோசர்களிடமிருந்து உருவாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?


விஞ்ஞானிகள், பெரும்பாலும், உபிராஜாரா ஜுபாடஸ்-இன் உடலின் பெரும்பகுதிக்கு மேல் முடி போன்ற புரோட்டோஃபெதர்கள் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அவை அதன் கழுத்து, முதுகு மற்றும் கைகளில் மட்டுமே காணப்பட்டன. அவற்றின் முதுகு மற்றும் பின்புறத்தில் உள்ள புரோட்டோஃபெதர்கள் மிக நீளமாக உள்ளன, மேலும் இது டைனோசர்களுக்கு தனித்துவமான ஒரு வகையான தோற்றத்தை கொடுப்பதாக இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  


உபிராஜாராவின் ரிப்பன் போன்ற கட்டமைப்புகள் அவை, தனது துணையை ஈர்க்க அல்லது எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இருந்திருக்கலாம். அல்லது யார் வலிமையானவர்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கான போட்டிகளுக்கும் பயன்பட்டிருக்கலாம். 


இத்தகைய விஷயங்கள் பெரும்பாலும் ஆண் விலங்குகளால் செய்யப்படுகின்றன. உதாரணமாக ஆண் மயில் (peacock) ஒன்றின் தோகைக்கு டைனோசரின் இறகை ஒப்பிடலாம். இதன் அடிப்படையில் பார்த்தால்,  டைனோசர் உபிராஜாரா ஆண் என்ற ஊகங்களும் எழுகின்றன.   


Also Read | நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!


புதைபடிவத்திலிருந்து (Fossil) இதுபோன்ற விஷயங்களை உறுதியாய் தெரிந்து கொள்வது சாத்தியமில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் உபிராஜாரா வண்ணமயமான நிறங்களுடன் கண்ணைக் கவரும் தோற்றத்தில் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.


தேசம், சர்வதேசம், உலகம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR