ஹெர்குலேனியம் (Herculaneum) என்ற பண்டைய ரோமானிய நகரத்தின் தொல்பொருள் இடத்தில் மனித மூளையின் நரம்பியல் கட்டமைப்புகள் உறைந்த நிலையில் (frozen neuronal structures) கண்டெடுக்கப்பட்டிருப்பதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஹெர்குலேனியத்தில் நாம் கண்டறிந்த திசுக்களைப் பற்றிய ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, எதிர்காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற அந்த ஆராய்ச்சிகள் உதவக்கூடும்" என்று இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் குழுவின் மூத்த ஆய்வாளர் பியர் பவுலோ பெட்ரோன் (Pier Paolo Petrone) கூறுகிறார். இவர், ஃபெடரிகோவில் உள்ள நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் (Naples' University Federico) தடயவியல் மானுடவியலாளர் (forensic anthropologist) ஆவார்.


"பல்வேறு கோணங்களிலும் ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ளோம். எங்களுக்கு கிடைக்கும்  தரவுகளும் தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவராலும் அறியப்பட்ட வெசுவியஸ் (Vesuvius) எரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த போது என்ன நடந்தது என்பது போன்ற பிற தகவல்கள் கிடைக்கும். அதன் மூலம் சரித்திரம் மற்றும் அறிவியலின் வேறு கோணங்களையும், புதிய அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்" என்று ஆராய்ச்சியாளர் பியர் பவுலோ கூறுகிறார்.


உயிரிழந்தபோது அந்த நபரின் வயது 20ஆக இருந்திருக்கும் என்றும், ஒரு மர படுக்கையில் இருந்த அவரது உடலின் எச்சங்கள் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


PLOS ONE என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் பியர் பவுலோ இவ்வாறு கூறுகிறார்: ”வெடிப்பின் தீவிர வெப்பமும், அதையடுத்து ஏற்பட்ட உடனடி குளிர்ச்சியும், அந்த நபரின் மூளையை ஒரு கண்ணாடி பொருளாக மாற்றியது, இதனால் அவரது நரம்பியல் கட்டமைப்புகள் அப்படியே உறைந்து போயின”.


"வெப்பநிலை துரிதமாக குறைந்ததற்கான சான்றுகள் மூளை திசுக்களில் காணக்கப்படுகின்றன. எரிமலை வெடிப்பின் போது நிகழும் செயல்முறைகளின் ஒரு தனித்துவமான அம்சம் இதுவாகும். எதிர்காலத்தில் எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானிப்பதற்கு பொருத்தமான தகவல்களை தற்போது நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் வழங்கக்கூடும்" என்று பெட்ரோன் கூறினார்.


மூளை உறைந்து போயிருக்கிறதா என யாரையும் திட்டுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் போல...


Also Read | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR