பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!

கங்கை நீர் பாவங்களை போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நிலையில், அந்த கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 1, 2020, 05:37 PM IST
  • பாவங்களை போக்கும் கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.
  • கங்கை நீரில் சுமார் 1,100 வகையான நுண்ணுயிர் உண்ணிகள் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • கங்கை நீர் பல நோய்களுக்கான சிகிச்சையாக உள்ளது என்று கருதப்படுகிறது.
பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!

கங்கை நீர் பாவங்களை போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நிலையில், அந்த கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.

கங்கை நீரில் உள்ள நுண்ணுயிர் உண்ணி (Bacteriophages), எந்த அளவிற்கு கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் என்பது குறித்து, பனாரஸ் இந்து பல்கைகழகத்தில் மருத்துவ அறிவியல் கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில் கங்கை நீரில் உள்ள நுண்ணுயிர் உண்ணியில், வைரஸை அளிக்கும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டது.

கங்கை நீரில் சுமார் 1,100 வகையான நுண்ணுயிர் உண்ணிகள் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யமுனை மற்றும் நர்மதா நதியில்,  200 க்கும் குறைவான வகை நுண்ணுயிர் உண்ணிகளே உள்ளன. அதனுடன் ஒப்பிடும் போது, கங்கை நீரில்  மிக அதிக அளவில் நுண்ணுயிர் உண்ணிகள் உள்ளது. அதனால் கங்கை நீர் தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது. 

மேலும் படிக்க | COVID-19 Update: புதிய பாதிப்புகள் 86,821; மொத்த பாதிப்புகள் 63 லட்சத்தை தாண்டியது

ஆய்வுகள் மூலம் சில நம்பிக்கைக்குரிய முடிவுகள் ஏற்பட்டால், அவற்றின் கொரோனா சிகிச்சை பயன்பாட்டை நிரூபிக்க மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 

பனாரஸ் இந்து பல்கலை கழகத்தின் (BHU) நெறிமுறைக் குழுவின் அனுமதி கிடைத்த பின்னர் உடனடியாக மனிதர்கள் மீதான் பரிசோதனைகள் தொடங்கப்படும் என பனாரஸ் இந்து பல்கலை கழகம் குறிப்பிட்டுள்ளது.

கங்கை நீர் பல நோய்களுக்கான சிகிச்சையாக உள்ளது என்று கருதப்படுகிறது. COVID-19 சிகிச்சையிலும் கங்கை நதி நீர் முக்கிய பங்கை வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News