Alive after Death: மரணத்திற்கு பின் உயிருடன் வருவது சாத்தியமா?
ஒருவர் இறந்த பிறகு மீண்டும் உயிருடன் இருக்க முடியுமா? இது பற்றிய அறிவியலின் கருத்து என்ன தெரியுமா?
வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான கேள்விகளில் அனைவரும் அதீத ஆர்வம் உண்டு இது தொடர்பான கேள்விகள் பலவாக இருந்தாலும், அதற்கான உறுதியான பதில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் இந்த மர்மான விஷயத்தை வரையறுக்கிறார்கள். நம்பிக்கைகள், கருத்தாக்கங்கள் என்பவை ஒரு புறம் என்றாலும், அறிவியல் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறது?
ஒருவர் இறந்த பிறகு, மீண்டும் உயிருடன் வந்துவிட்டார் என்ற விசயத்தை பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு, ஒருவரின் உடலில் உயிர் இல்லை என்று அறிவித்தவர்களுக்கும் இந்த அதிசயம் நடந்திருக்கிறது.
READ ALSO | Tips for good health: உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் சூப்பர் ஜூஸ்கள்…
எனவே, ஒருவர் இறந்த பிறகு மீண்டும் உயிருடன் வர முடியுமா என்ற பெரிய கேள்வி எந்த காலத்திலும் மிகப் பெரியதாகவே இருக்கிறது.
மனித உடல் மற்றும் அதன் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது செல்களுக்குள் பல வகையான ரசாயன எதிர்வினைகள் நடைபெறுகின்றன. ஏடிபி எனப்படும் ஆற்றல் எதிர்வினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் உடலின் செல்கள் இந்த ஏடிபியின் ஆற்றலை அவற்றின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் புனரமைப்புக்காக பயன்படுத்துகின்றன.
உடலில் உள்ள என்ட்ரோபி (entropy) யால் செல்கள் பலவீனமடையும் போது, உடல் பலவீனமடையத் தொடங்குகிறது. இதன் காரணமாக நமது உடல் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படுகிறது. அப்போது ஒருவர் இறக்கிறார். அதாவது, உடலில் உள்ள செல்கள் பலவீனமடையும் போது நமது மரணம் ஏற்படுகிறது. மரணத்திற்கு பிறகும் செல்கள் பலவீனமடைவதும் தொடரும்போது, உடலின் சிக்கலான செயல்முறையும் நின்றுவிடுகிறது.
Also Read | விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!
இத்தகைய சூழ்நிலையில், உடல் இறந்த பிறகும் ஒரு நபரை உயிர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு துல்லியமான ஆம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தையில்பதிலளிக்க முடியாது. ஏனெனில் அறிவியலும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது.
இதுவரை, நமது அறிவியல் கண்டுபிடிப்புகளில், இது போன்ற எந்த முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை, இது உடலின் செல்களுக்கு புத்துயிர் அளித்து, அந்த நபரை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும்.
இந்த நம்பிக்கையில், பலர் எதிர்காலத்தில் எப்போதாவது மீண்டும் உயிர்த்து எழலாம் என்ற நம்பிக்கையில் தங்களுடைய சடலத்தை கிரையோஜெனிக் டேங்கர்களில் (cryogenic tankers) பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்துவிடுகின்றனர்.
Also Read | 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்
இந்த கிரையோஜெனிக் டேங்கர்களில், நபரின் உடலுக்குள் உள்ள செல்கள் உறைந்திருக்கும். எதிர்காலத்தில், ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டால், இந்த செல்களை நானோபோட்களின் உதவியுடன் மீண்டும் சரிசெய்ய முடியும், ஒருவேளை அவை வரும் காலத்தில் புத்துயிர் பெறலாம்.
இதுதொடர்பான இருவேறு கருத்துகள் உள்ளன. அவை ஒன்றுடன் மற்றொன்று முரண்படுபவை. . வாழ்க்கை பற்றிய இந்த அறிவியல் கருத்தின்படி, உணர்வு மற்றும் இருப்பு என்று எதுவும் இல்லை. நாம் ஒரு சிக்கலான உடல் கட்டமைப்பின் அடிப்படையில் மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.
மறுபுறம், ஆன்மீகவாதிகள் மற்றும் மத நம்பிக்கைகளின்படி, ஒரு நபரின் மரணத்திற்கு பின்னால் உணர்வுகள், அவர்கள் செய்த செயல்கள் அதாவது கர்மாக்கள் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த இரு கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் உண்மை என்ன?
இதுவரை யாருக்கும் தெரியாது. அறிவியலும், ஆன்மீகமும் தங்கள் சொந்தக் கருத்துக்களின் அதை தங்கள் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் வரையறுக்கின்றனர்.
Also Read | இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR