Bizarre! கர்ப்பிணி, பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள்!
கர்ப்பிணி, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதற்கு முன்னர் மனித உடலில் கண்டிராத 55 ரசாயனங்கள் இருப்பது பீதியை கிளப்பியிருக்கிறது.
கர்ப்பிணி, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதற்கு முன்னர் மனித உடலில் கண்டிராத 55 ரசாயனங்கள் இருப்பது பீதியை கிளப்பியிருக்கிறது.
மாசுபாடுகள் காரணமாக காற்று நஞ்சாகி (poisonous) வருகிறது என்ற கவலைகள் ஏற்கனவே இருந்த நிலையில், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் தற்போது மனிதர்களின் ரத்தத்தையும் அடைந்துவிடுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கர்ப்பிணி ஒருவருக்கும் அவருக்கு பிறந்த குழந்தைக்கும் ரத்த பரிசோதனை செய்தபோது, அதில் அபாயகரமான 109 ரசாயனங்கள் இருப்பது தெரியவதது.
அதிலும் 109இல் 55 இரசாயனங்கள் இதற்கு முன்பு மனித உடலில் காணப்படாட்க ரசாயனங்கள் என்பது அதிர்ச்சியை அதிகமாக்கினால், அதில் 42 ரசாயனங்கள் 'மர்ம ரசாயனங்கள்' (mysterious chemicals) என்று கருதப்படுகின்றன.
Also Read | TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக 30 கர்ப்பிணிப் பெண்களை ஆய்வு செய்தனர். ரசாயனம் கலந்த காஸ்டிமெடிக்ஸ் (chemical costimetics) அல்லது அழகுசாதன பொருட்கள் (cosmetics) மற்றும் பிளாஸ்டிக் மூலம் உடலுக்குள் ரசாயனங்கள் சென்றிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பெண்களின் உடலில் உள்ள அந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி மூலம் பரவியிருக்கலாம்.
உயர் தெளிவுத்திறன் கொண்ட ஸ்பெக்ட்ரோமெட்ரி (HRMS) (ஒளி அலைகளின் ஆராய்ச்சி) மூலம் ரத்தத்தில் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒளியின் அலைகள் மூலம் ரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவை வெவ்வேறு பகுதிகளாக உடைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் கண்டறிந்த ரசாயங்களில் 40 இரசாயனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுடன் தொடர்புடையவை. 28 அழகுசாதனப் பொருட்களுடன் தொடர்புடையவை, 29 மருந்து தயாரிப்புகளுடன் தொடர்புடையவை. இதேபோல், உடலில் 23 இரசாயனங்கள் இருப்பது பூச்சிக்கொல்லிகளில் காணப்படுபவை.
Also Read | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்
இதேபோல், தொழில்துறை பொருட்களின் உற்பத்தியில் இருந்து ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் கலவைகள் வெளியேற்றப்படுகின்றன. அதில் பெரும்பாலானவை கம்பளம் (carpet) மற்றும் மரப் பொருட்களிலிருந்து வருகின்றன.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெண்கள், பெண்கள் மற்றும் இனப்பெருக்க அறிவியல் (Women, Women and Reproductive Sciences) துறை பேராசிரியர் இதுபற்றி இவ்வாறு தெரிவிக்கிறார். “இதுபோன்ற ரசாயனங்கள் உடலில் சிறிது காலம் இருக்கும். தற்போது, மனித உடலில் மேலும் அதிகமான ரசாயனங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது”.
இந்த அறிக்கையின் அடிப்படையில், இது போன்ற வேதிப்பொருட்கள் உடலுக்குள் செல்வதைத் தடுக்க மேம்படுத்தப்பட்ட மூலோபாயத்தை உருவாக்க வேண்டும்.
Also Read | கலாசார காவலர்கள் யார் தெரியுமா? பிரதமர் மோடியின் மதுரை அதிரடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR