வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்

மாநிலத்தின் தலையெழுத்தை முடிவு செய்ய மக்கள் போடும் ஓட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தேர்தல் அறிக்கைகளில் காட்டப்படும் கனவுகளையும், அளிக்கப்படும் வாக்குறுதிகளையும், வேட்பாளர்களின் இயல்பையும், கட்சிகளின் நிலைத்தன்மையையும் ஆராய்ந்து வாக்களிப்பது நல்லது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 11:56 AM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது.
  • தொகுதிகளிலும், வேட்பாளர்களின் செயல்முறைகளிலும் பலவித வினோதங்களை இம்முறை காண முடிகிறது.
  • மாநிலத்தின் தலையெழுத்தை முடிவு செய்ய மக்கள் போடும் ஓட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்   title=

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும், வேட்பாளர்களின் செயல்முறைகளிலும் பலவித வினோதங்களை இம்முறை காண முடிகிறது.

ஒரு வேட்பாளர் தங்க நகைக்கடையாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார், ஒருவரோ மக்களுக்கு சிக்கன் 65 சமைத்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார். ஒருவர் துணி துவைத்து கொடுத்தால் மற்றொருவரோ ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன், நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என கனவு காணச் செய்தார்.

ஒரு வேட்பாளர்  (Candidate) இலவச அறுவை சிகிச்சையை அறிவித்தார், ஒருவர் தோற்பதற்காகவே போட்டியிடுகிறேன் என பெருமையாகக் கூறினார்.

சில குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும், பெயர்களும் கூட அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ல் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பவானிசாகர் மற்றும் வால்பாறை தொகுதிகளில் குறைந்தபட்சமாக 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி இருக்கிறது. 

ALSO READ: தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்

பொதுவாக, ஒரு தொகுதியில், ஒரு பிரபலமான வேட்பாளர் போட்டியிட்டால், அதே பெயரில் பல சுயெட்சை வேட்பாளர்கள் களமிறங்கி வாக்காளர்களை குழப்புவது வழக்கமாக நடக்கும் விஷயமாகும். இம்முறையும் எந்த குறையும் இல்லாமல் அப்படிப்பட்ட விஷயங்களும் நடந்துள்ளன. 

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பாமக (PMK) கட்சி சார்பில் மாம்பழச் சின்னத்தில் பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். அதே தொகுதியில், அதே பெயரில், திராட்சை சின்னத்தில் ஒருவரும், காலிஃபிளவர் சின்னத்தில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இரு சுயேட்சை வேட்பாளர்கள் அதே பெயரில் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்களுக்கும் இந்த தேர்த்லில் பஞ்சமில்லை. ராமச்சந்திரன் என்ற பெயரில் அதிமுகவில் 2 வேட்பாளர்கள், திமுகவில் 3 வேட்பாளர்கள், காங்கிரஸில் ஒருவர், அமமுகவில் ஒருவர் என 7 பேர் போட்டியிடுகிறார்கள். 

கருணாநிதி என்ற பெயரில் திமுகவில் (DMK) இரு வேட்பாளர்களும், சமத்துவ மக்கள் கட்சியில் ஒரு வேட்பாளரும் போட்டியில் உள்ளனர். 

முருகன் என்ற பெயரிலும் மொத்தமாக 9 பேர் போட்டியில் உள்ளனர். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என அனைத்து கட்சி கூட்டணிகளிலும் முருகன் என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

மாநிலத்தின் தலையெழுத்தை முடிவு செய்ய மக்கள் போடும் ஓட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தேர்தல் அறிக்கைகளில் காட்டப்படும் கனவுகளையும், அளிக்கப்படும் வாக்குறுதிகளையும், வேட்பாளர்களின் இயல்பையும், கட்சிகளின் நிலைத்தன்மையையும் ஆராய்ந்து வாக்களிப்பது மக்களின் கடமையாகும். இந்த கடமையை ஆற்றும் முன் களைகட்டியிருக்கும் தேர்தல் களத்தின் பலவித சுவாரசியங்களையும் மக்கள் ரசிக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடியும் வரை, வேடிக்கையையும் கேளிக்கையையும் நீங்கள் தேடிப் போக வெண்டாம், அதுவே உங்கள் வீடு தேடி வரும்!!

ALSO READ: PMK: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News