ஆக்சிஜனின் அளவு குறையும் மாற்றமானது, பூமியை 2.4 பில்லியன் ஆண்டுகள் பழமையான கிரேட் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வுக்கு (Great Oxidation Event) முன்பு இருந்ததைப் போன்ற நிலைக்குத் திரும்பச் செய்யும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆக்சிஜன் அளவுகள் குறைவது பூமியை மூச்சுத்திணறச் செய்யும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். 


பூமியில் எப்போதுமே ஆக்ஸிஜன் நிறைந்துக் காணப்படுவதில்லை என்றும், எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு அதிகமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அப்போது, புவியில் ஆக்ஸிஜன் குறையும் என்றும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.


இது அண்மையிலோ, அல்லது நமது வாழ்நாளிலோ நடக்க வாய்ப்பில்லை. பூமியில் ஆக்ஸிஜன் அளவு குறைய குறைந்தது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேச்சர் ஜியோசயின்ஸில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் அறிக்கை சொல்லும் விஷயம் கவலையை ஏற்படுத்துகிறது.


Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk  காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!


ஆக்சிஜன் பூமியில் குறையும் மாற்றம் விரைவாக இருக்கும். இந்த மாற்றம் பூமியை 2.4 பில்லியன் ஆண்டுகள் பழமையான கிரேட் ஆக்ஸிடேஷன் நிகழ்வுக்கு (GOE) முன்பு இருந்த நிலைக்கு பூமியை கொண்டு சென்றுவிடும்.


சூரிய கதிர்வீச்சு அதிகரித்து நமது கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர்வாழ் சூழலை அகற்றும். சூரியனின் பிரகாசத்தில் ஏற்ற இறக்கங்களை கணக்கில் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், பூமியின் உயிர்க்கோளத்தின் விரிவான மாதிரிகளை ஆராய்ந்தனர்.


அதன்படி, கார்பன் டை ஆக்சைடு தாவரங்கள் போன்ற உயிரினங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறைவான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!


மேலும், தற்போதைய ஆய்வின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் வளிமண்டல ஆக்ஸிஜன் பொதுவாக பூமி போன்ற கிரகங்களின் தொடர்ச்சியான அம்சமாக இருக்குமா என்பது தெரியாது என்று கூறுகின்றனர். பிரபஞ்சத்தில் வாழ்க்கையின் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க மனித முயற்சிகளுக்கு இது போன்ற ஆராய்ச்சிகள் முக்கியமானவை.


உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கான அதிக வாய்ப்பைப் பெற, ஆக்ஸிஜனைத் தவிர மற்ற ஆதாரங்களையும் நாம் கண்டறிய வேண்டியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்களின் ஆராய்ச்சி நாசாவின் NExSS (Nexus for Exoplanet System Science) முயற்சியின் ஒரு பகுதியாகும்,


இது, பூமியைத் தவிர மற்ற கிரகங்களின் வாழ்வாதாரத்தைப் பார்க்கிறது. அவர்களின் மதிப்பீடுகளின்படி, பூமி கிரகமானது, தனது மொத்த வாழ்நாளில் 20-30% மட்டுமே வாழ முடியும். மனிதர்களும் பிற பெரிய உயிரினங்களும் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் நுண்ணுயிர் வாழ்க்கை தொடர்கிறது என்று ஆய்வு முடிவுகள் அவதானிப்பை வெளியிட்டுள்ளன.


READ ALSO | எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் போதாது  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR