ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பது மறுக்க முடியாதது. நம் அடுத்த கட்ட நகர்வுக்கும், அடுத்த கட்ட சுறுசுறுப்புக்கும் ஓய்வு ஒன்று தான் அடிப்படையான விஷயம். அதிலும், மனிதர்களுக்கு ஓய்வு மிக முக்கியமானது. மனிதர்களின் ஓய்வு தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் யாரும் சரியான நேரத்தில் தூங்குவது கிடையாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 04:57 PM IST
ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்! title=

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பது மறுக்க முடியாதது. நம் அடுத்த கட்ட நகர்வுக்கும், அடுத்த கட்ட சுறுசுறுப்புக்கும் ஓய்வு ஒன்று தான் அடிப்படையான விஷயம். அதிலும், மனிதர்களுக்கு ஓய்வு மிக முக்கியமானது. மனிதர்களின் ஓய்வு தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் யாரும் சரியான நேரத்தில் தூங்குவது கிடையாது.

பலரும் ஓய்வு என்பது வீணானது, பயனற்றது மற்றும் உற்பத்தித் திறனை பாதிக்கும் என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், அதேவேளையில் அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு கூறுகிறது. இதுகுறித்த, ஆய்வு சமூக உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், ஓய்வு நேரத்தை குறைவாக அனுபவித்த மக்கள், அதிக அளவு மன அழுத்தத்துக்காளாகி உள்ளனர். அதேவேளையில், குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர். ஓய்வு எடுத்துக் கொள்வது அதிக அளவு மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது தான் என்றாலும், அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது மன அழுத்தத்தைத் தான் உண்டாக்கும்.

 

Rest

இதுகுறித்த ஆய்வில், 199 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆய்வில் அவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், மகிழ்ச்சி, மனச் சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்றவை அளவிடப்பட்டன. அதேநேரத்தில் அவர்களின் ஓய்வு நேரமும் அளவிடப்பட்டன. ஆனால், இது போன்ற ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வீணடிக்கவேபடுகின்றன.

அதிக ஓய்வு கூட உயர் ரத்த அழுத்தத்துடன், அதிக மன அழுத்தத்தைத் உருவாக்கும். முறையற்ற அதிக ஓய்வினால் உயர் இரத்த அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக வெளிப்படும். இதன் காரணமாக துக்கமின்மை ஏற்படுவதோடு, அலர்ஜி போன்றவை ஏற்படும். இதனால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பலரும் ஓய்வு என்பதை பார்ட்டி மற்றும் பப்புகளில் செலவிடைவதையே ஓய்வு என்று எண்ணுவர். இது தவறான எண்ணமாகும். ஓய்வு எடுத்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, நமது மூளைக்கும் தேவைப்படும் ஒரு விஷயமாகும். சரியான பல வழிகளில் கூட நீங்கள் உங்களின் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம், மனமகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் கூட ஈடுபடலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G 

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News