விண்வெளியில் ஒலித்த Fire Alarm; விண்- உலா போன வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) ரஷ்யாவிற்கு சொந்தமான தொகுதியில், ஒலித்த புகை மற்றும் தீ அலாரம் பீதியை உருவாக்கியது
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) ரஷ்யாவிற்கு சொந்தமான தொகுதியில், ஒலித்த புகை மற்றும் தீ அலாரம் பீதியை உருவாக்கியது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான ஸ்வெஸ்டா சேவை (Zvezda service ) தொகுதியில், புகையை கண்டறியும் ஸ்மோக் டிடெக்டர் அலாரம் ஒலித்ததால் பீதி ஏற்பட்டது.
மேலும், விண்வெளி வீரர்கள் பிளாஸ்டிக் எரியும் வாசனை வருதாக தெரிவித்தனர் என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ஸ்வெஸ்டா சேவை (Zvezda service) தொகுதியில், இரவு முழுவதும் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டு, ISS குழு உறுப்பினர்களுக்கு தங்கி ஓய்வெடுப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
தீ அலாரம் ஒலித்ததால், தேவையான பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளும் வரை, விண்வெளி வீரர்களான ஒலெக் நோவிட்ஸ்கி (Oleg Novitskiy) மற்றும் பியோதர் டுப்ரோவ் (Pyotr Dubrov) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே, சுமார் 7 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டு, விண்வெளியில் நடந்து நேரத்தை கழித்தனர். பிரச்சனைகள் வியாழக்கிழமை அதிகாலையில் தொடங்கிய நிலையில், இப்போது பழுதுகள் சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி புகை வருவதை பார்த்தோடு, பிளாஸ்டிக் எரியும் வாசனையும் வருவதாக கூறினார் என நாசா (NASA) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அதே போன்று, பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய பிரிவில் இருந்து அமெரிக்காவிற்கு சொந்தமான பிரிவுக்கு புகை பரவியதாகவும், எரிந்த பிளாஸ்டிக் அல்லது எலக்ரானிக் பொருள் வாசனை வந்ததாகவும் கூறினார்.
குழுவினர் காற்று வடிகட்டிகளைச் செயல்படுத்தி, காற்றின் தரம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் இரவு நேரத்தில் ஓய்வெடுக்க திரும்பினர் என Roscosmos நிறுவனம் கூறியுள்ளது.
நாசா 'விண்வெளி அவசரநிலை' என்று அறிவித்த இந்த சம்பவம், விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யப் பிரிவின் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ| இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR