புரியாத புதிர்: உலகில் அங்கே இங்கே என தோன்றிய உலோக மர்ம தூண் இப்போது இந்தியாவிலும்..!
ஆங்காங்கே தோன்றும் மர்ம தூண்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கும் (Aliens) சம்பந்தம் உள்ளதா என குழப்பம் நிலவுகிறது. உலோக தூண்கள் எப்படி வந்தது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இதன் மர்மம் விலகவில்லை.
உலகில் பல இடங்களில், மனித நடமாட்டம் மிக குறைவாக உள்ள பகுதிகளில், அவ்வப்போது தோன்றும் உலோகத்தினாலான மர்ம தூண்கள் அனைவரையும், அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.
ஆங்காங்கே தோன்றும், மோனோலித் என்ற மர்ம தூண்களுக்கும் (Monolith) வேற்று கிரகவாசிகளுக்கும் (Aliens) சம்பந்தம் உள்ளதா என குழப்பம் நிலவுகிறது. உலோக தூண்கள் எப்படி வந்தது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இதன் மர்மம் விலகவில்லை.
கடந்த சில மாதங்களாக, உலகின் பல்வேறு இடங்களில் தோன்றிய இந்த ஒற்றை மர்ம தூண்கள், இப்போது இந்தியவிலும் தோன்றியுள்ளது.
அகமதாபாத்தில் (Ahmedabad) உள்ள தால்தேஜில் உள்ள சிம்பொனி வன பூங்காவில் (Symphony Forest Park) இந்த உலோக அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தூண், உலகின் மற்ற இடங்களில் தோன்றிய அமைப்பை போல் முக்கோண்ட வடிவிலான தூணாக உள்ளது. கட்டமைப்பில் சில எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதும் தெரியவில்லை.
இந்த அமைப்பு குடியிருப்பாளர்கள் மற்றும் பிற மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலர் இங்கு வந்த அது இருக்கும் இடத்தில் செல்ஃபி படங்கள் எடுத்து வருகின்றனர். இது வரை இது போல் ஆங்காங்கே மர்மமாக தோன்றும் உலோக தூண்கள் சிறிது நாட்களுக்கு பிறகு காணாமல் போவதால், அதற்குள் படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் கூடுகிறார்கள்.
ALSO READ | விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!
இந்த ஒற்றை தூண்களின் தோற்றம் குறித்து சமூக ஊடகங்களில் வெவ்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. 1960களில் இதேபோன்ற கட்டமைப்புகள் தோன்றியதாக சிலர் கூறுகின்றனர். சிலர், வெவ்வேறு கலைஞர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் இதனை அமைத்து வருவதாக கூறுகின்றனர்.
அகமதாபாத் பூங்காவில் டிசம்பர் 29 ஆம் தேதி இது தோன்றியதாக கூறப்படுகிறது.
சிம்பொனி வன பூங்காவை சிம்பொனி லிமிடெட் மற்றும் அகமதாபாத் மாநகராட்சி நிர்வகிக்கிறது. இது கடந்த மாதம் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
உலகில் முதல் ஒற்றை உலோகத்தூண், நவம்பர் மாதம் அமெரிக்காவின் (America) உட்டாவின் தொலைதூர பகுதியில் காணப்பட்டது. அதன் பிறகு, பெல்ஜியம் மற்றும் கலிபோர்னியாவினல் தோன்றியது. பின்னர் ருமேனியாவில் காணப்பட்டது. ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கொலம்பியா உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் தோன்றியுள்ளது.
ALSO READ | Aliens On Earth: எப்போது வேண்டுமானாலும் ஏலியன்கள் பூமிக்கு வரலாம்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR