சந்திரயான்-2: இந்திய விண்வெளி ஆர்வலரின் புதிய கண்டுபிடிப்புகளால் பரபரப்பு!!
சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் கண்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் விண்வெளி ஆர்வலர் சண்முக சுப்பிரமணியன், ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் நல்ல நிலையில் இன்னும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் கண்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் விண்வெளி ஆர்வலர் சண்முக சுப்பிரமணியன் (Shanmuga Subramanian), ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் நல்ல நிலையில் இன்னும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார். தொடர்ச்சியான ட்வீட்களில், சந்திரயான் - 2 இன் பிரக்யான், விக்ரம் லேண்டரிலிருந்து (Vikram Lander) சில மீட்டர் தூரத்தில் இருப்பதைக் காட்டும் படங்களை அவர் பகிர்ந்து கொண்டார். கடினமான தரையிறக்கம் காரணமாக அதன் பேலோடுகள் சிதைந்தன என்பது நினைவிருக்கலாம்.
மேலும், லேண்டருக்கு அனுப்பப்பட்ட கட்டளைகள் பெறப்படுவதற்கான ஒரு தனித்துவமான சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், விக்ரம் லேண்டரால் மீண்டும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனது கண்டுபிடிப்புகளில் ISRO-வை டேக் செய்துள்ள அவர், தனது கண்டுபிடிப்புகளின் படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கான விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
டிசம்பர் 3, 2019 அன்று சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் NASA கண்டுபிடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இவற்றை முதலில் ஒரு இந்திய தொழில்நுட்ப வல்லுநரும் விண்வெளி ஆர்வலருமான சுப்பிரமணியன் கண்டுபிடித்தார் என்பது தெரியவந்தது. LRO கேமரா குழு செப்டம்பர் 26 அன்று தளத்தின் முதல் மொசைக்கை வெளியிட்டது. பலர் விக்ரம் லேண்டரின் அறிகுறிகளைத் தேட மொசைக்கை பதிவிறக்கம் செய்தனர்.
அவர்களில் சண்முக சுப்பிரமணியனும் ஒருவர். LRO-ஐ தொடர்புகொண்ட அவர், சந்திரயானின் சில பகுதிகளைக் தான் அடையாளம் கண்டதாகக் கூறினார். இந்த உதவிக்குறிப்பைப் பெற்ற பிறகு, LRO குழு படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியது. நாசா குழு அதன் படத்தில் சுப்பிரமணியனுக்கும் இந்த கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தையும் வழங்கி பெருமை சேர்த்தது.
முன்னதாக, ஜூலை 22, 2019 அன்று மதியம் 2:43 மணிக்கு சந்திரயான் -2 –ஐ ஏற்றிச்சென்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரம் 3,84, 000 கி.மீ. விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி பயணத்தின் 48 வது நாளில் சந்திரனில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது கடினமான தரையிறக்கமாக இருந்தது. சந்திரயான் 2 இன் சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி பிரிந்த விக்ரம் லேண்டர்,செப்டம்பர் 7 ஆம் தேதி, சந்திர மேற்பரப்பில் இறங்கும்போது இஸ்ரோ மிஷன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. தரையிறக்கம் வெற்றிகரமாக இருந்திருந்தால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா,நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்திருக்கும். சந்திரயான் 2-ன் லூனார் ஆர்பிட்டர் தற்போது அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுத்து நிலவைச் சுற்றி வருகிறது.
ALSO READ: நாட்டிற்காக இரவு பகலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்தனர் -மோடி!