புது தில்லி: நண்பர்களோ அல்லது உறவினர்களோ, அனைவருக்கும் மற்றவருடைய வருமானத்தைப் பற்றி அறிய மிகவும் ஆர்வமாக இருக்கும். குறைந்த வருமானம் கொண்டவர்கள் வெட்கத்தாலும், அதிக வருமானம் உடையவர்கள் கண் பட்டுவிடும் என்ற அச்சத்தாலும், பெரும்பாலும் தங்கள் வருமானத்தை மறைக்கவே முயற்சிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இப்போது உங்கள் வருவாயை யாரிடமிருந்தும் மறைக்க முடியாது. இப்போது மனித கழிவுகளிலிருந்து வருமானம் அறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? இது உண்மைதான்!! இந்த விஷயம் ஒரு ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது.


குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்தது


ஆஸ்திரேலியாவில் (Australia) உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வகம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரின் கழிப்பறையின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளது. நாட்டின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து மனித கழிவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டன.


அறிக்கையின்படி, இந்த மனித கழிவு மாதிரிகள் குளிரூட்டப்பட்டன. இந்த மாதிரிகளின் அடிப்படையில், மக்களின் உணவு மற்றும் மருந்து பழக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


ALSO READ: 2020-ல் நொடிக்கு 2 முறைக்கு மேல் Swiggy-ல் order செய்யப்பட்ட ‘India’s Favourite Dish’ எது தெரியுமா?


ஆராய்ச்சியில் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள்


இந்த ஆராய்ச்சியை (Research) ஓ'பிரையன் மற்றும் பிஎச்.டி ஆய்வாளர் பில் சோய் ஆகியோர் செய்துள்ளனர். மனித கழிவுகளில் அதிக அளவு நார்ச்சத்து, சிட்ரஸ் மற்றும் கஃபின் இருந்தால், அவர்கள் பொருளாதார ரீதியாக வளமானவர்கள் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம், மலம் மற்றும் சிறுநீரில் நார்ச்சத்து (Fiber), சிட்ரஸ் மற்றும் கஃபின் அளவு குறைவாக இருந்தால், அவர்கள் குறைவான வசதி படைத்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.


வசதி குறைவானவர்களின் மலம் மற்றும் சிறுநீரில் மருத்துவ நுகர்வு அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் உள்ள நபர்களின் மலம் மற்றும் சிறுநீர் அவர்களின் உணவு ஆரோக்கியமானதாக (Healthy Food) இருப்பதையும் வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


சுகாதார கொள்கைகளை உருவாக்குவதில் உதவி


ஆராய்ச்சியாளர்களான சோய் மற்றும் ஓபிரைன், இதுபோன்ற ஆராய்ச்சிகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்ய முடியும் என தாங்கள் கருதுவதாகக் கூறுகின்றனர். எந்தப் பகுதியில் வாழும் மக்கள் எப்படி சாப்பிடுகிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இது சுகாதாரக் கொள்கைகளை (Health Policy) உருவாக்க உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: பாட்டிலில் அடைத்து காற்று விற்பனை! 500 மில்லி லிட்டர் Bottled Air ரூ. 2500


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR