சக்கரவாக பறவை பற்றி நமது புராண நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதில சக்கரவாக பறவை தாகத்திற்காக மழை நீரை தவிர வேறு எந்த நீரையும் குடிக்காது என்று கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட சக்கரவாக பறவை போல் ஒரு அதிசய மனிதர் வாழ்கிறர்


தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, ஒரு நபர், 32 ஆண்டுகளாக மழை நீரை தவிர வேறு விதமான தண்ணீர் எதையும் பருகியதில்லை. அது தான் அவரது ஆரோக்கியத்தின் ரகசியம் எனக் கூறுகிறார். 


தெலுங்கானாவைச் சேர்ந்த வங்கி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சக்கரவாக பறவை போல் மழை நீருக்காக வானத்தை நோக்கி ஆவலுடன் மழைக்காக காத்திருப்பார்.  ஏனெனில் இந்த நீர் தான் அவரது ஆரோக்கியத்தின் ரகசியம். தெலுங்கானாவின் சங்கரெட்டி நகரத்தில் வசிக்கும் பொன்னட வசந்த குமார், கடந்த முப்பத்தி இரண்டு வேறு எந்த வகை தண்ணீரையும் குடித்ததில்லை.


ஒவ்வொரு மழைக்காலத்திலும், மழைநீரை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார். குமார் தனது வீட்டின் பால்கனியில் வரிசையாக ஆறு ட்ரம்களை வைத்து, மழை நீரை சேகரிக்கிறார். ஒரு குழாய் மூலம் மழைநீரை சேகரிக்க அவர் தனது வீட்டில் மழை நீர் சேகரிப்பிற்கான ஒரு அமைப்பை நிறுவியுள்ளார்.


அவர் ஒவ்வொரு டரம்மிலும் படிகாரத்தை கலக்கிறார், இதன் விளைவாக தூசி துகள்கள் கீழே தேங்கி விடுகின்றன. பின்னர், இரண்டு நாட்களுக்கு பிறகு தண்ணீரைப் பயன்படுத்துகின்றார். "தண்ணீரை வடிகட்டிய பிறகு, நான் அதை ஒரு செப்பு பாத்திரத்தில் சேமித்து குடிக்க பயன்படுத்துகிறேன். நான் வேறு எந்த நீரையும் பயன்படுத்த மாட்டேன், இது கடந்த 32 ஆண்டுகளாக கடைபிடிக்கும் பழக்கம்”என்றார் குமார்.


குமார், இது வரை ஒரு முறை கூட நோய்வாய்ப்பட்டதில்லை என்றும் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதில்லை என்றும் கூறினார். “எனக்கு மூட்டு வலி, இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லை. இந்த மழைக்காலத்தில் கூட, எனக்கு வியர்க்கும். தேவையான அளவு அனைத்து தாதுக்களையும் கொண்ட மழை நீரின் காரணமாக எனது உடல நிலை நன்றாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு


அவர் மழைநீரை சமையல் செய்யவும் பயன்படுத்துகிறார். ஒரு உள்ளூர் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், குமார் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் தனது அன்றாட வேலைகளை வீட்டில், தானே செய்து கொள்கிறார்.


“மழை நீர், நமக்கு  இயற்கை வழங்கும் அற்புதமான பரிசு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அதைப் பயன்படுத்துவதில்லை. மழை நீரின் சுவை மற்றும் நன்மைகளை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது, ”என்றார் குமார்.


முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து சங்கரெடிக்கு திரும்பி வந்தார். அப்போது மழைநீரின் நன்மைகளை உணர்ந்தார். "காண்டிப்பேட்டையில் இருந்து வரும் நீரை உபயோகிப்பதால்  உங்கள் உடல் மினுமினுப்புடன், தலைமுடியும் ஆரோக்கியமாக உள்ளது என்று என்னை சந்திப்பவர்கள் என்னிடம் கூறினர். காண்டிப்பேட்டையில் இருந்து வரும் தண்ணீரின் சிறப்பு என்ன என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன், பின்னர் இந்த நீர்த்தேக்கம் மழைத் தண்ணீரை ஆதாரமாக கொண்ட நீர் என்று நான் கண்டேன், ”என்று அவர் கூறினார்.


சங்கரெடிக்கு வந்த பிறகு, குமார் மழை நீரைக் குடிக்கத் தொடங்கி அதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டார்.


அவர் மழைக்காலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். முதல் மழையிலில் அதிக தூசித் துகள்கள் இருப்பதால் அவர் அந்த  நீரை சேமிப்பதில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் சங்கரெடியில் அதிக அளவு மழை பெய்வதால் அவருக்கு பற்றாக்குறை ஏற்பட்டத்தில்லை.


மேலும் படிக்க | அட்லாண்டிக் பெருங்கடலின் கீழ் அரிய பூமராங் பூகம்பம்.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!