2016 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் ஆழமான கடற்பரப்பை உலுக்கிய ஒரு அரிய மற்றும் அசாதாரணமானபூமராங் பூகம்பம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.
பாறைகள் திடீரென உடையும் போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன, ஆனால் பூமராங் பூகம்பத்தின் போது, வெடிப்பு ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் அதை விட்டு விலகி, சிறது தூரத்திற்கு பரவுகிறது, ஆனால் பின்னர் திரும்பி அதிக வேகத்தில் வந்த வழியே சென்று தீவிரமாக தாக்குகிறது.
ALSO READ | மொரீஷியஸில் பயங்கர எண்ணெய் கசிவு: அவசரநிலையை அறிவித்த அரசு..!!
நேச்சர் ஜியோசைன்ஸில் செவ்வாயன்று, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள் நடத்திய ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அதில், அவர்கள் அட்லாண்டிக் கடலின் கீழ் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஒன்றின் பாதையை ஆய்வு செய்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், 2016 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த அரிய வகை பூகம்பங்களில் ஒன்றாகும். இந்த பூகம்பம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ரோமன்ச் ஃப்ராக்சர் மண்டலத்தில் நடந்தது, இது பிரேசிலின் கிழக்கு கடற்கரைக்கும் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைக்கும் இடையில் ஏறக்குறைய நடுப்பகுதியில் உள்ளது.
சயின்ஸ்அலெர்ட்டின் கூற்றுப்படி, நடுக்கம் ஒரு திசையில் பயணித்தது, பின்னர் திரும்பி, அதே திசையில் இரண்டாவது முறையாக வேகமாக தாக்கியுள்ளது.
ALSO READ | Video: இந்தோனேஷியாவின் சினாபுங் எரிமலை வெடித்து பரவிய சாம்பலால் இருள் சூழ்ந்தது..!!!
இரண்டாவது, முறையாக, வேகமாக தாக்கம் ஏற்படுத்துவதில் முதல் கட்ட சிதைவு மிகவும் முக்கியமானது என்று அக்குழு நம்புகிறது.
இந்த புதிரான அரிதான நிலநடுக்கம் குறித்த தெளிவான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக என்று ஆய்வில் பங்கேற்ற முக்கிய பேராசிரியர் டாக்டர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறினார்
பூகம்பம் தொடர்பாக தரவுகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்குவதற்கு முன்பு பூகம்பம் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அதற்கு முற்றிலும் எதிராக நடந்துள்ளதற்கு, பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்றும், முதல்முறையாக கடலில் தான் இது ஏற்பட்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இத்தகைய பூகம்பங்கள் குறித்த ஆய்வு காரணமாக விஞ்ஞானிகள் வரக்கூடிய ஆபத்துக்களை சிறப்பாக கணிக்கலாம். இது பல வகைகளில் உதவக்கூடும், மேலும் எதிர்காலத்தில் இதன் மூலம் திறமையான வகையில் கணித்து, எச்சரிக்கை முறைகளை செயல்படுத்தலாம்.