சீனா தண்ணீர் இல்லாத அணு உலையின் முதல் சோதனைகளைத் தொடங்குகிறது. சீனாவில் உள்ள அரசு விஞ்ஞானிகள், தண்ணீர் மூலம் குளிரூட்டப்படாத சோதனை அணு உலைக்கான வடிவமைப்புகளை வழங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்சு மாகாண நிர்வாகத்தின் அறிக்கையின்படி, தோரியம் அடிப்படையிலான உருகிய உப்பு உலை (molten salt reactor) கட்டுமானம் இந்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல் சோதனைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்.


தோரியம் (Thorium) என்பது கதிரியக்க பண்புகளைக் கொண்ட ஒரு உலோக உறுப்பு ஆகும், இது கால அட்டவணையில் யுரேனியத்திற்கு (uranium) அருகில் உள்ளது. 1940 களில் அமெரிக்கா அணுசக்தி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்தபோது மாற்று எரிபொருள் ஆதாரமாக தோரியம் ஆராயப்பட்டது.


இதற்காக, டென்னசியில் உள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் (Oak Ridge National Laboratory) தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோதனை உருகிய உப்பு அணு உலை ஒன்றையும் அமெரிக்கா நிறுவியது.  ஆனால் 1970களின் தொடக்கத்தில் யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் பயன்படுத்தலாம் என்ற யோசனை கைவிடப்பட்டது. அதன்பிறகு அந்த ஆலையும் மூடப்பட்டுவிட்டது.


Read Also | மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு


வட சீனாவின் கோபி (Gobi Desert) புறநகரில் வுவேய் அருகே கட்டப்பட்டு வரும் இந்த புதிய அணுஉலை 2 மெகாவாட் உற்பத்தி கொண்ட ஒரு சோதனை முன்மாதிரி ஆலை ஆகும்.


சீன அறிவியல் சஞ்சிகையான நியூக்ளியர் டெக்னிக்ஸில், ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு பிஸிக்ஸ் (Shanghai Institute of Applied Physics) ஒரு கட்டுரை வெளியிட்டது. அதன்படி, தொடர்ச்சியான மினியேச்சர் உருகிய உப்பு உலைகளை உருவாக்கும் நோக்கம் இருப்பதாக தெரிகிறது. அவை ஒவ்வொன்றும் 100 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த ஆற்றல் 100,000 மக்களுக்கு தேவையான மின்சாரத்தைக் கொடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.


உருகிய உப்பு ஆலைகளுக்கு, பாரம்பரிய அணு மின் நிலையங்களைப் போல, குளிரூட்டலுக்கு தண்ணீர் தேவையில்லை, இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள மேற்கு மாகாணங்கள் போன்ற வறண்ட பகுதிகளில் இதுபோன்ற ஆலைகளை உருவாக்க முடியும் என்று அறிக்கை கூறுகிறது.


உண்மையில் யுரேனியத்திற்கு பதிலாக தோரியம் பயன்படுத்தப்பட்டால், அது சர்வதேச அளவில் பல மாறுதல்களை ஏற்படுத்தும்.


Also Read | சிறிய வகை ராக்கெட்டுகளை உருவாக்க சென்னை startup நிறுவனத்துடன் ISRO ஒப்பந்தம்..!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR