அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில், தீ மிகவும் வேகமாக பரவிய நிலையில், அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல தீயணைப்பு வாகனங்களை அனுப்ப வேண்டியிருந்தது. அஜ்மான் காவல்துறை இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் 'அஜ்மான் ஒன் காம்ப்ளெக்ஸின்' டவர்-2  கட்டிடத்தில் ஏற்பட்டுள்ளது என்றது. தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் சரியான விரைவு நடவடிக்கையின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் போலீஸார் கூறுகின்றனர். கட்டிடம் தீப்பிடித்து எரிவதை கண்டு மக்கள் அச்சமடைந்து சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் வீடியோ


 



 


தீ விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதில், பல மாடி கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தில் இருந்து விழுந்து கிடக்கும் குப்பைகளும் தெளிவாகத் தெரியும், சிலர் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அஜ்மான் காவல்துறை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் ஒரு நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டு சேதத்தை பற்றிப் புகாரளிக்கவும், அந்த இடத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டது என்றார்.


கட்டடத்தில் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன


கடந்த சில வருடங்களாக கட்டிடத்தில் தீ பிடிக்கும் சம்பவம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை எச்சரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்துறை அமைச்சக தரவுகளில், 2022 ஆம் ஆண்டில் 3,000 க்கும் மேற்பட்ட தீ பற்றிய சம்பவங்கள் நடந்ததாக சிவில் பாதுகாப்பு குழுக்கள் தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,169 சம்பவங்கள் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஆகும். தீ பிடித்த சமப்வங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 2,090 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டு 1,968 என்ற அளவில் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.


மேலும் படிக்க |  கிரேக்க கடலில் 750 பேருடன் சென்ற குட்டி கப்பல் கழிழ்ந்து விபத்து! முழு விவரம்!


ஏப்ரல் மாதத்தில் 16 பேர்களை பலி வாங்கிய தீ விபத்துக்கள்


பெரும்பாலான தீ விபத்துகள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டதாக அமைச்சகம் கூறியது. வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 1,385 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஏப்ரல் மாதம், துபாயின் அல் ராஸில் உள்ள அல் கலீஜ் தெருவுக்கு அருகில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். ஷார்ஜா சிவில் பாதுகாப்பு துறை தலைவர் சமி அல் நக்பி இது குறித்து கூறூகையில், 'இந்த தீ விபத்து புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன' என்றார்.


மேலும் படிக்க |  கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா... கை கொடுத்த பெலாரஸ் அதிபர்... நடந்தது என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ