விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
விண்வெளி ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் (Astronauts) வாழ்க்கை வசதியை மேம்படுத்த NASA அவ்வப்போது புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (NASA) விண்வெளி ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் (Astronauts) வாழ்க்கை வசதியை மேம்படுத்த அவ்வப்போது புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு விண்வெளி வீரர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழிப்பறைகளை அமைக்க திட்டமிட்டது.
விண்வெளியில் வாழ்க்கை மிகவும் கடினமானது
விண்வெளியில் வாழ்க்கை மிகவும் கடினம். அங்குள்ள மர்மங்களியும் ரகசியங்களையும் அறிய பல மாதக்கணக்கில் வாழும் விண்வெளி வீரர்கள் மிகவும் வித்தியாசமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். புவி ஈர்ப்பு இல்லாததால், அவர்கள் சாப்பிடுவது, தூங்குவது முதல் ஒவ்வொரு வேலைகளையும் செய்யும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். இவற்றில் ஒன்று சலவை செய்வது. துணிகளைக் கழுவுவதற்கு நீர் மிக இன்றியமையாத விஷயம். அது விண்வெளி நிலையங்களில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை
ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்
விண்வெளியில் வீசப்படும் அழுக்கு துணிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சலவை செய்யும் வசதி இல்லாததால், விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதனால் விண்வெளியில் துணி குப்பை மிகவும் அதிகரித்து விட்டது. சலவை வசதி இல்லாததால், நாசா (NASA) ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் ஒவ்வொரு ஆண்டும் 72 கிலோகிராம் (160 பவுண்டுகள்) ஆடைகளை நிலையத்திற்கு அனுப்புகிறது. எனவே, விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சலவை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுப்பது தான் நிரந்தர தீர்வவாக இருக்கும்.
விண்வெளிக்கு ஏற்ற வகையில் சிறப்பு வகை சோப்பு தயாரிக்கப்படும்
விண்வெளியில் சலவை பிரச்சனையை தீர்க்க செய்ய நாசா புரோக்டர் & கேம்பிள் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இதன் கீழ், நிறுவனம் விண்வெளி நிறுவத்திற்கென சிறப்பாக தயாரிக்கப்படும் சோப்புகளை பயன்படுத்தி பல சோதனைகளை செய்யும். இதன் மூலம் விண்வெளியில் சலவை செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்படலாம். செவ்வாயன்று, புரோக்டர் & கேம்பிள் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இறுதி கட்ட சோதனை விண்வெளி நிலையத்தில் நடைபெறும்
நாசா மேற்கொள்ளும் இந்த பரிசோதனையில், மைக்ரோ ஈர்ப்பு மற்றும் கதிர்வீச்சின் விளைவு மதிப்பீடு செய்யப்படும். இதன் பின்னர் விண்வெளி நிலையத்தில் இறுதி கட்ட பரிசோதனை செய்யப்படும். சோதனைக்கான பெரும்பாலான உபகரணங்கள் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளன. மீதமுள்ள பொருட்களை P&G அனுப்பும் என கூறப்பட்டுள்ளது .
ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒலிக்கும் சப்தத்தை கேளுங்கள்; NASA வெளியிட்டுள்ளது புதிய வீடியோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR