சிறுகோள் பென்னு மர்மம்: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பத்தால் நெருப்பாய் தகிக்கும் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலையில் கல்லாய் உறையும் என்று நாசா வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, நாசா பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் OSIRIS-REx வாகனத்தை செலுத்தியது. இந்த வாகனம் அங்கிருந்து அனுப்பும் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இன்னும் சில நாட்கள் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆய்வு செய்வார்கள். இதன் பிறகு, OSIRIS-REx பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாசா தொடங்கும்.
 
நாசா, ஒசராஸ் ரெக்ஸ் வாகனத்தை இந்த கிரகத்திற்கு அனுப்பியுள்ளது, அந்த வாகனம் பல்வேறு வகையான தகவல்களைத் தருகிறது. 10,000 முதல் 1,00,000 ஆண்டுகளில் இந்த மர்ம கிரகத்தில் பாறைகளில் விரிசல் ஏற்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், இந்த வாகனம் பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதுவரை இந்த வாகனம், இன்னும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்


விண்வெளி ஆய்வுகளில் மிகவும் தீவிரமாக உள்ள நாசா, சில சமயங்களில் செவ்வாய் கிரகத்தில், சில சமயம் நிலவில் அல்லது விண்வெளி தொடர்பான தகவல்களுக்காக என நாசா விண்வெளிக்கு வாகனங்களை அனுப்பி வைக்கிறது. நாசா அனுப்பியிருக்கும் OSIRIS-REx வாகனம், பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.


இந்த வாகனம் பென்னுவின் மேற்பரப்பில் தரையிறங்கியதிலிருந்து, விஞ்ஞானிக்கு ஆச்சரியமான தகவல்களை அனுப்புகிறது. அவற்றைப் பார்த்து விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  


10 ஆயிரம் ஆண்டுகளில் பாறைகளில் விரிசல்கள் இங்கு வருகின்றன


ஒசராஸ் ரெக்ஸ் வாகனத்தில் இருந்து அனுப்பப்பட்ட தரவுகளின்படி, பூமியை விட சூரியனின் வெப்பம் இந்த சிறுகோள் மீது அதிகமாக இருக்கிறது. இங்கு 10,000 முதல் 100,000 ஆண்டுகளில் மட்டுமே பாறைகளில் விரிசல் ஏற்படுகிறது. சாதாரண வாழ்க்கையில், 10 ஆயிரம் ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலமாக இருக்கலாம், ஆனால் புவியியல் ரீதியாக இது மிகவும் குறுகிய காலம் என்று Université Cote d'Azur France இன் மூத்த விஞ்ஞானி Marco Delbo கூறுகிறார்.


மேலும் படிக்க | என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? 


பென்னு என்ற இந்த சிறுகோள்களில் ஒரு பாறை எவ்வாறு உடைந்து மீண்டும் உருவாகிறது என்பதை அறிந்து அவர்கள் ஆச்சரியமடைந்தனர். வெப்பநிலையில் ஏற்படும் துரித மாற்றம் காரணமாக இது நிகழ்கிறது.
 
மிகவும் குறுகிய பகல்-இரவு சுழற்சி


பென்னுவைப் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பகலில், பென்னுவின் வெப்பநிலை சுமார் 127 டிகிரி செல்சியஸை என்றால், இரவில் அது மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். மிக வேகமாக ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக, பாறைகளில் இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது.


மாதிரி 2023க்குள் பூமிக்கு வரும்


நாசா விஞ்ஞானிகள் தற்போது வாகனம் அனுப்பிய படம் மற்றும் பிற தகவல்களை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வாகனம் அங்கிருந்து கூடுதல் மாதிரிகளை சேகரிப்பதில் வெற்றி பெற்றதா அல்லது மீண்டும் முயற்சி செய்ய வேண்டுமா என்பதை தெரிந்துக் கொண்ட பிறகு, இந்த வாகனம் பூமிக்கு திரும்ப வரவழைக்கப்படும். இது வெற்றியடைந்தால், 2023-ம் ஆண்டு, மாதிரியுடன் வாகனம் பூமிக்கு திரும்பும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  


மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!