வாஷிங்டன்: மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் நாசாவின் லட்சிய பணியை மேற்கொண்டு வரும் பர்ஸிவரென்ஸ் (Perseverance) ரோவரின்,  ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்தன. உ நாசா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பர்ஸிவரென்ஸ் ரோவர்  மூலம் துளையிடுவதன் மூலம் அங்குள்ள மண்ணை கொண்டு வர முயன்றது. இந்த முயற்சியில் தோல்வியை தழுவினாலும், ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணை வெற்றிகரமாக துளையிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இடப்பட்ட துளை


அமெரிக்க விண்வெளி நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று ரோவருடன்,  ஒரு சிறிய மேட்டின் மையத்தில் ஒரு துளை போடப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது. இந்த துளை ரோபோவால் போடப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்  ரோபோ ஒரு துளை போடுவதில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இருப்பினும், ரோவர் மாதிரியைச் சேகரித்து ஒரு குழாயில் அடைத்து வைக்கும் முதல் முயற்சிக்குப் பிறகு பூமிக்கு அனுப்பப்பட்ட தரவில், துளை போடப்பட்டாலும் அதிலிருந்து மண்ணை சேகரிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.


ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்


இது குறித்து, நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்புச்சென் வெளியிட்டுள்ள, ஒரு அறிக்கையில், 'எடுக்கப்பட்ட முயற்சியில் எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும், புதிய முயற்சியில் முதல் தடவை வெற்றி கிடைப்பது சிறிது கடினம். ஆனால், எதிர்காலத்தில் இந்த முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


மேற்பரப்பில் துளையிட11 நாட்கள் எடுக்கும்


மேற்பரப்பில் ட்ரில் செய்து துளையிடுவது மாதிரி செயல்பாட்டின் முதல் படியாகும், இந்த செயல்முறையை முழுமையாக மேற்கொள்ள 11 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததைக் கண்டறிய  முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, செவ்வாய் கிரகத்தின் புவியியலை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்புகள் உதவும்.


இந்த பணி ஒரு வருடத்திற்கு முன்பு புளோரிடாவிலிருந்து செலுத்தப்பட்ட பர்ஸிவரென்ஸ் ரோவர், பிப்ரவரி 18 அன்று ஜெஸெரோ க்ரேட்டரில் தரையிறங்கியது. அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிரேட்டரில் ஒரு ஆழமான ஏரி இருந்தது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.


ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR