COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஸ்டன்: அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனாவின் புதிய வேரியண்ட் மிகவும் கொடூரமானதாக உள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அதிர்ச்சி தரும் அறிவியல் உருவாக்கம், அனைத்து தரப்பினரிடையேயும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. நெருப்புடன் விளையாடும் அமெரிக்க விஞ்ஞானிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று உலக அளவில் கண்டனங்கள் வலுக்கின்றன. 


சீனாவில் இதேபோன்ற ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தான், உலக அளவில், கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. புளோரிடா மற்றும் பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்கலைக்கழக ஆய்வகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக, ஃபாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது.


இந்த ஆராய்ச்சி தொடர்பான செய்தி வெளி வந்தவுடன், சுகாதார நிபுணர்கள் விஞ்ஞானிகளை விமர்சித்தனர். இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட எலிகளில் 80 சதவீதம் உயிரிழந்தன. அமெரிக்க விஞ்ஞானிகள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க ஆய்வகத்தில் கொடிய ஆராய்ச்சி


கொரோனாவின் இந்த திரிபு ஓமிக்ரான் மற்றும் வுஹானின் அசல் வைரஸின் கலவையாகும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரானில் இருந்து ஸ்பைக் புரதத்தைப் பிரித்தெடுத்த ஆராய்ச்சியாளர்கள், சீனாவின் வுஹானில் தொற்றுநோயின் தொடக்கத்தில் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திரிபுடன் அதனைக் கலந்தனர்.


மேலும் படிக்க: கொரோனாவை ஒழிக்க வைட்டமின் சி போதுமா? 


பாதிக்கப்பட்ட எலிகளுக்கு, தங்கள் கண்டுபிடிப்பை செலுத்திய விஞ்ஞானிகள், அவற்றுக்கு எலிகளின் உடலில் ஏற்பட்ட எதிர்வினைகளை பதிவு செய்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய கொரோனா வைரஸில், ஓமிக்ரான் விகாரத்தை விட ஐந்து மடங்கு அதிக தொற்று வைரஸ் துகள்கள் உள்ளன.


ஆராய்ச்சி பற்றிய கேள்விகள்


தொற்று நோய் ஆய்வகங்களில் புளோரிடா மற்றும் பாஸ்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த ஆய்வகம் அமெரிக்காவில் உள்ள 13 உயிரியல் பாதுகாப்பு நிலை 4 ஆய்வகங்களில் ஒன்றாகும். இது கோவிட் மற்றும் எபோலா போன்ற ஆபத்தான ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.


ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மீது விமர்சனம்


இதுபோன்ற ஆராய்ச்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் சாமுவேல் ஷாபிரா வலியுறுத்தினார்.


மேலும் படிக்க: NVX-CoV2373: குழந்தைகளுக்கான Novovax தடுப்பூசிக்கு DCGI அனுமதி..!!


புதிய வகை கொரோனாவை ஆய்வகத்தில் உருவாக்கியதுபோலவே, வேறு விஞ்ஞானிகள் SP1-77 எனப்படும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர், இது அனைத்து COVID-19 வகைகளின் வீரியத்தையும் குறைக்கிறது.  


பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வின் போது அதை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்புகள், சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | நாட்டின் முதல் நாசி தடுப்பூசி பயன்படுத்த DCGI ஒப்புதல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ