கொரோனா பாதிப்பு என்றாலே எதிர்மறையான கருத்துக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகில் உலா வருவது இயல்பானதே. ஏனெனில் கோவிட் நோய் உலகை அந்த அளவுக்கு பாதித்துள்ளது. கொரோனாவின் முதல் அலையில் வயது வந்தவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டார்கள் என்றால், இரண்டாம் அலைக்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் குழந்தைகளையும் தாக்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி நாளொரு கவலையும், பொழுதொரு பாதிப்பு எண்ணிக்கையையும் கொடுத்து வரும் கொரோனா தொடர்பான ஒரேயொரு சிறிய நல்ல செய்தி வந்திருக்கிறது. சிறிய ஒளிக்கீற்றுப் போல வந்திருக்கும் இந்த நம்பிக்கையை ஊட்டுவது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் தான்.


லேசான கொரோனா பாதிப்பு உடலில் நீடித்த நோய் எதிர்ப்பை உண்டாக்குகிறது என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், நிம்மதியையும் அளிக்கிறது.


Also Read | Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 208,921 பேருக்கு கொரோனா


மனிதர்களின் உடலில் ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் ஒரு சிறிய தொகுதி, நீண்டகால பிளாஸ்மா செல்கள் (plasma cells) ஆகும். எலும்பு மஜ்ஜையில் இருக்கின்றன.


இந்த செல்கள் எலும்பு மஜ்ஜையில் (bone marrow), தொடர்ந்து குறைந்த அளவிலான ஆன்டிபாடிகளை (antibodies) சுரக்கின்றன, அவை வைரசின் மற்றுனொரு பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.


கோவிட் -19 பாதித்து, குணமானவர்களிடம் இருந்து எடுத்த ரத்த மாதிரிகளில் ஆன்டிபாடி அளவைக் கண்டறியும் ஆராய்ச்சியை   வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.


Also Read | Buddha Purnima: இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா


ஆரம்ப தொற்றுநோய்க்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மூன்று மாத இடைவெளியில் ரத்த மாதிரிகள் கொடுக்கும் 77 பங்கேற்பாளர்கள் இந்த ஆராய்ச்சில் இணைந்தனர். இவர்களில் ஆறு பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அதோடு, கோவிட் -19 இல்லாதவர்களிடம் இருந்தும் எலும்பு மஜ்ஜைகள் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவிட் -19 பாதித்தவர்களுக்கு தொற்றுநோய்க்குப் பிறகு முதல் சில மாதங்களில் ரத்தத்தில் ஆன்டிபாடி அளவுகள் விரைவாகக் குறைந்துவிட்டன, பின்னர் அவை அதிகரித்தன. கொரோனா தொற்று ஏற்பட்ட 11 மாதங்களுக்குப் பிறகும் அவர்களின் உடலில் சில ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.  


ஆனால், கோவிட் -19 (Covid-19) பாதிக்காதவர்களின் எலும்பு மஜ்ஜையில் இதுபோன்றா ஆன்டிபாடி உற்பத்தி செல்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


"கோவிட் பாதித்தவர்களின் உடலில் இருந்த இந்த செல்கள் பிளவுபடவில்லை. அவை எலும்பு மஜ்ஜையில் இருந்துக் கொண்டு ஆன்டிபாடிகளை சுரக்கின்றன. வைரஸ் தொற்று  குணமானதில் இருந்தே இந்த வேலையை உடல் செய்யத் தொடங்கிவிடுகிறது. இந்த வேலை காலவரையின்றி தொடரும்" என்று ஆராய்ச்சி கூறுகிறது.


Also | Ship fire off Colombo: சரக்குக் கப்பலின் தீயை அணைக்க 2 கப்பல்களை அனுப்பியது ICG


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR