நியாண்டர்தால் உயிரினம் தற்போது அருகிவிட்டது. நியண்டர்தால் (Neanderthal), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். அவை, மனிதர்களுடன் பாலியல் உறவு கொண்டதால் அழிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கும் நியண்டர்தால்களுக்கும் இடையிலான பாலியல் உறவுகளின் விளைவாக, அவற்றுக்கு ஏற்பட்ட அரிய ரத்தக் கோளாறு இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த ரத்த கோளாறுகள், நியண்டர்தால்களின் சந்ததிகளில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.


PLOS One இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நியண்டர்தால்களின் ரத்த மாதிரிகளில், அவர்களின் ரத்தம் குறிப்பிட்ட மரபணு மாறுபாடுகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, இது கரு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஹீமோலிடிக் நோயால் பாதிப்பைக் காட்டுகிறது (HDFN).  இந்த எச்டிஎஃப்என் ரத்த சோகையை ஏற்படுத்தலாம் என்றும், அது பொதுவாக இரண்டாவது, மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த கர்ப்பங்களில் மோசமடையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.


இது, நியண்டர்தால் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுத்திருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர். "நியான்டர்தால் மற்றும் டெனிசோவன்களின் ரத்தக் குழு அமைப்புகளை பகுப்பாய்வு செய்தோம். அதிலிருந்து அவற்றின் தோற்றம், விரிவாக்கம் மற்றும் ஹோமோ சேபியன்களுடன் சந்திப்பு ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது" என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


Also Read | மணக்கோலத்தில் உடற்பயிற்சி செய்யும் மணப்பெண்ணின் வீடியோ வைரல்


இது நியண்டர்தால்களுக்கு இடையிலான பாலியல் உறவுகளின் விளைவாகவும் கூட நடந்திருக்கலாம் என்றாலும், மனித மூதாதையர்கள் மற்றும் நியண்டர்தால்களுக்கு இடையேயான பாலியல் உறவுகளில் HDFN இன் ஆபத்து அதிகமாக உள்ளது என்பதையும் அறிவியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


"இந்த பாலியல் தொடர்பு, நியண்டர்தால் இனத்தின் சந்ததியினரின் அழிவுக்கு வழிவகுக்கும் அளவுக்கு பலவீனப்படுத்த பங்களித்திருக்கலாம். அதுவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவம் மற்றும் ஹோமோ சேபியன்களுடனான போட்டியுடன் இணைந்து பார்க்கும்போது இந்த கணிப்பு வலுவடைகிறது" என்று அறிக்கை கூறுகிறது.


இந்த கோளாறு இப்போது மனித இனங்களில் மிகவும் அரிதாகவே கருதப்பட்டாலும், நியண்டர்தால் இனங்களின் மரபணு மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றுக்கு இது பொதுவானதாக கருதப்படுகிறது.


"இந்த மரபணு வடிவங்கள் 4,000 கிமீ தொலைவிலும் 50,000 வருடங்கள் இடையிலான தனிநபர்களிடையே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மரபணு தனித்தன்மை மற்றும் கருவிற்கு ரத்த சோகை ஆபத்து என்பது நியண்டர்தால்களில் மிகவும் பொதுவானதாக இருந்திருக்கும்" என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட Aix-Marseille பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மசியர்ஸ் தெரிவித்ததாக டெய்லி மெயில் பத்திரிகை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


Also Read | Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR