Viral Video: மணக்கோலத்தில் உடற்பயிற்சி செய்யும் மணப்பெண்ணின் வீடியோ வைரல்

திருமணத்திற்கு முன் சர்வாலங்கார பூஷிதையாக மணக்கோலத்தில் உடற்பயிற்சி செய்யும் மணப்பெண்ணின் வீடியோ வைரல்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 4, 2021, 09:22 PM IST
  • மணக்கோலத்தில் உடற்பயிற்சி
  • மணப்பெண்ணின் வீடியோ வைரல்
  • திருமணத்திற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வீடியோ
Viral Video: மணக்கோலத்தில் உடற்பயிற்சி செய்யும் மணப்பெண்ணின் வீடியோ வைரல் title=

திருமணம் என்பது இருமனதின் பொருத்தம் என்பது உண்மை தான். ஆனால் அதைவிட இருவரின் உடல் ஆரோக்கியமும், உடல் பொருத்தமும் திருமண வாழ்க்கைக்கு முக்கியமானது. திருமண மேடையில், சர்வ அலங்காரங்களையும் செய்து கொண்ட மணப்பெண் நாணிக் கோணி குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் வந்து அமர்ந்து தாலிக் கட்டிக் கொள்வது ஒரு காலம்.

இன்று மணமகள் அலங்காரத்தில் பதுமையாக நடந்துவந்து தாலி கட்டிக் கொண்டாலும், புதுமைப் பெண்கள் அதிலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தக் காலம். திருமணத்திற்கு முன் சர்வாலங்கார பூஷிதையாக இந்தப் பெண் செய்யும் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இதுவரை, இந்த வீடியோ 5 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் மணமகளின் அணுகுமுறை  இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்த்துள்ளது.

Also Read | Hog hostel: பன்றிக்கும் உயர்தர ஹோட்டல்களை உருவாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா?

கோவிட் -19 தொற்றுநோய் நிச்சயமாக உலகத்தையே பாதித்து ஆரோக்கிய குறைபாடுகளை அதிகரித்துவிட்டது. வெளியில் செல்வதற்கு தடை என்பது பெரும்பாலானவர்களை சோம்பேறியாக ஆக்கியுள்ளது, இருப்பினும், உடலை மந்தமாக்காமல், இயல்பாக வைக்க பல வழிகள் உள்ளன. அதுதான் உடற்பயிற்சி. 

அந்த உடற்பயிற்சியை வலியுறுத்தி, இந்த வித்தியாசமான எண்ணமுடைய மணமகள், கனமான திருமண உடையில் (லெஹெங்கா) புஷ்-அப் செய்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது மணமகள் நடனமாடுவதையும் வேடிக்கை பார்ப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்,

இருப்பினும், இந்த மணமகள் விஷயங்களை வேறு நிலைக்கு எடுத்துச் சென்று கனமான லெஹெங்கா மற்றும் நகைகளை அணிந்து உடற்பயிற்சி செய்தார். அவருடைய தலைமுடி மற்றும் ஒப்பனை கலையாமல் மிகவும் நேர்த்தியாக உடற்பயிற்சி செய்கிறார் மணப்பெண்.  

இந்த வீடியோவை ஆனா அரோரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மாடல் மற்றும் உணவியல் நிபுணரான ஆனாவை இன்ஸ்டாகிராமில் 78,000 க்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.

அவர் அடிக்கடி தனது உடற்பயிற்சி பயணம் மற்றும் உடற்பயிற்சியை தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொள்கிறார். மணமகளின் திருமண ஆடைகளில் வழக்கத்திற்கு மாறாக உடற்பயிற்சி செய்வதால் வைரலாகி வருகிறது.

Also Read | 2021 batch students வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என தனியார் வங்கி விளம்பரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News