செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறிது காலத்திற்குப் பிறகு, மனிதர்கள் பூமியில் வாழ முடியாது.  ஏனென்றால், வரும் தசாப்தங்களில், மனிதர்களின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால், மனிதர்கள் வாழ பூமியில் இடமிருக்காது என்கின்றனர் விஞ்ஞானிகள். அதற்கு மாற்று வழி என்ன என ஆராய்ந்தால், அதற்கான பதில் விண்வெளியில் உள்ளது. சந்திரன், விண்வெளி நிலையம் அல்லது செவ்வாய் கிரகம் என அனைத்தும் மனிதரக்ள் வாழும் இடமாக மாறலாம். இதனுடன்,  முதல் மனித குழந்தை எப்போது விண்வெளியில் பிறக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளனர். 


விண்வெளியில் மனிதர்கள் வாழ்க்கை


அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிறிஸ் இம்பே, வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்வெளியில் வாழத் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சி பணியோடு நிற்காமல்,  சாதாரண மக்களை போல் வாழ்க்கை நடத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒலிக்கும் சப்தத்தை கேளுங்கள்; NASA வெளியிட்டுள்ளது புதிய வீடியோ


விண்வெளியில் முதல் மனித குழந்தையின் பிறப்பு


2051 அல்லது அதற்கு முன்பாகவே, முதல் மனித குழந்தை விண்வெளியில் பிறக்கக்கூடும் என்று கிறிஸ் இம்பேயின் ஆஅராய்ச்சி கட்டுரை தெரிவிக்கிறது


விண்வெளி பயணத்தில் உலக நாடுகள் போட்டி


விண்வெளி பயணத்திற்கான போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா என பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’  மூலம் உலகில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும்  4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. இது வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சீனாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. 


விண்வெளி பயணத்தில் முன்னணியில் எலோன் மஸ்க்


எலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), விண்வெளி தொடர்பான பணிகளில் நாசாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.


ஜெஃப் பெசோஸின் நிறுவனம் 


இது தவிர, ஜெஃப் பெசோஸின் நிறுவனம் ப்ளூ ஆரிஜின்ஸ் விண்வெளிப் பணியில் ஈடுபட்டுள்ளது. ப்ளூ ஆரிஜின்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் சூரிய மண்டலத்தில் ஒரு காலனியைக் கட்டும் திட்டத்தை வகுத்துள்ளது.


ALSO  READ | வரலாறு படைத்துள்ள NASA; Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR