US Navy on UFO: கலிபோர்னியாவின் கடற்கரையில் UFO நீரில் மறைந்த புகைப்படம் கசிவு
அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் (UFO) புதிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அடையாளங்காண முடியா பறக்கும் பொருள் (UFO) ஒன்று கலிபோர்னியாவின் கடற்கரையில் நீரில் மூழ்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கடற்படை எடுத்த இந்தப் புகைப்படம் கசிந்துள்ளது.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் (UFO) புதிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
திரைப்படத் தயாரிப்பாளரும் யுஎஃப்ஒ ஆர்வலருமான ஜெர்மி கார்பெல் (Jeremy Corbell) பகிர்ந்த காட்சிகளில், கலிபோர்னியாவின் கடலில் பறக்கும் பொருள் சென்று மறைந்து போவதைக் காணலாம்.
அமெரிக்க கடற்படை சான் டியாகோ கடற்கரையில் (San Diego’s coast) ஜூலை 2019 இல் இந்த காட்சிகளை படம்பிடித்துள்ளது. இருண்ட தட்டு போன்ற ஒரு பொருள் கடலுக்கு மேலே சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். வீடியோவில், ராணுவ வீரர்கள் “it splashed”என்று சொல்வதைக் கேட்கலாம்.
Also Read | விராட் கோலி உலகில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் இல்லை!
ராணுவ வீரர்களால் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டவை என்பதை என்.பி.சி செய்தியிடம் அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. இது "டிரான்ஸ்மீடியம் (transmedium capable) திறன் கொண்டது". அதாவது காற்று மற்றும் நீர் இரண்டிலும் பயணிக்கக்கூடியது இந்த பறக்கும் தட்டு. இதனால், இந்த அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள், தண்ணீரில் எவ்வாறு மறைந்தது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
பென்டகனின், அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வு பணிக்குழு (Unidentified Aerial Phenomena Task Force) பறக்கும் பொருளின் மூலத்தை அறிய காட்சிகளை மதிப்பாய்வு செய்யும்.
தண்ணீருக்குள் நுழைந்த அந்த பறக்கும் பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று, கோர்பெல் (Corbell) தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அந்த பறக்கும் பொருளைத் தேட ஒரு நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
Also Read | இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு 2020 T20 World Cup பரிசுத் தொகையை கொடுக்காத BCCI
கடந்த ஆண்டு, பென்டகன் "அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்" (யுஏபி) என்று வகைப்படுத்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது, இது பயிற்சி மேற்கொள்ளும் கடற்படை விமானிகளால் பதிவு செய்யப்பட்டவை. 2004-2005 காலகட்டத்துக்கு இடைப்பட்டது. இந்த வீடியோக்கள் UFOக்கள் மீதான ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.
தற்போது COVID-19 தொற்றுநோய் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அடிக்கடி UFOக்கள் கண்ணில் படுவதாக தேசிய UFO அறிக்கையிடல் மையம் (National UFO Reporting Center (NUFORC)) தெரிவித்துள்ளது. 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,000 UFOக்கள் அதிகமாக காணப்பட்டதாக NUFORC தெரிவித்துள்ளது.
இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது.
Also Read | Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR