மனித விந்து கருமுட்டையை நோக்கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலான கருத்து தவறானது என ஆய்வில் தெரியவந்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித விந்தணுக்கள் (Human sperm) கருமுட்டையை நோக்கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நம்பிய கருத்து தவறானது எனவும், அவை நீர்நாயை போல் சுழன்று சுழன்று கருமுட்டையை அடைகிறது எனவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த புதிய வெளிப்பாடு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்து வந்தது. இந்த விஞ்ஞானிகள் முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்தி விந்தணு வால் இயக்கத்தை புனரமைத்தனர்.


மனிதனின் விந்தணு பற்றிய முதல் கண்டுபிடிப்பு 1678 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதை கண்டறிந்தவர்கள் அந்தோணி வான் லியூவான்ஹூக் என்ற டச்சுக்காரர். இவர், ஆற்றல் மிகுந்த மைக்ராஸ்கோப் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதில், தற்செயலாக பாக்டீரியாவையும் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், மைக்ராஸ்கோப்பை வைத்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் ஒருநாள், விந்துவையைம் ஆய்வு செய்தார். அப்போது, மிகவும் நுட்பமான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார். அந்த விந்தணுக்கள் தலை, வாலுடன் இருப்பதாக கூறினார். 


ஆணின் விந்தணுக்கள் ஒரு பாம்பினைப் போல் வளைந்து நெளிந்து நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதாகவும் அவர் கூறினார். UK ராயல் சொசைட்டியில் 1678 ஆம்  ஆண்டு கூறப்பட்ட ஹூக்கின் கருத்து இதுவரை மறுக்கப்படவில்லை. அவரைத் தொடர்ந்து வந்த அறிவியலாளர்கள் மைக்ராஸ்கோப் வழியாக விந்தணுவை பல கோணங்களில் ஆராய்ச்சி  செய்தபோதும் அதில் எந்த மாறுபட்ட கருத்தையும் தெரிவிக்கவில்லை.


ALSO READ | கொரோனாவை கொல்ல வெறும் தண்ணீர் போதுமா?.. ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!



கடந்த 340 ஆண்டுகளாக இந்த கருத்து மட்டுமே எல்லோரின் மனதிலும் பதிந்துள்ளது. இந்நிலையில், விந்தணு பற்றிய ஹெர்ம்ஸ் கெடில்லா-ன் புதிய கண்டுபிடிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பாலிமேத்ஸ் ஆய்வு மையத்தின் தலைவர் விந்தணு பற்றிய புதிய கண்டுபிடிப்பு பற்றி இவர் கூறுகையில்... ‘‘தற்போது ஏற்பட்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்பமான 3D மைக்ராஸ்கோப்பியில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் இத்தனை நாட்களாக நம்மை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. எங்களின் 3D மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்தபோது, விந்தணுக்கள் தனது வாலை பயன்படுத்தி பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதில்லை. அது, தண்ணீருக்குள் இருக்கும் ஒரு நீர்நாயை போல் சுழன்று சுழன்று செல்வதை கண்டறிந்துள்ளோம் என கூறியுள்ளார். 


தற்போது வளர்ச்சியடைந்திருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த உயிரணுக்களை அதிநவீன கேமராவின் துணையுடன் சுழற்சி முறையிலும் பார்க்க முடிகிறது,’’ என்கிறார் அவர்.அவர் மேலும் கூறுகையில், ‘‘விந்தணுக்கள் நீந்தும் வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பயணிக்க, விநாடிக்கு 55 ஆயிரம் காட்சிகளை பதிவு செய்யும் திறன் படைத்த மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தினோம். இதன் மூலம், தொலைவில் இருந்து மட்டுமே விந்தணுக்களை வேடிக்கை பார்க்காமல், அதனுடனே இணைந்து பயணிக்க முடிகிறது. அதன் பக்கவாட்டு நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடிந்தது. இதில் விந்தணுக்கள் சுழலும் தன்மையுடன்தான் நகர்கிறது என்பதைக் கண்டறிந்தோம். 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை நடத்தினோம்,’’ என்றார்.