பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களா! நிஜமாகப் போகும் கற்பனைக்கு வித்திடும் நாசா...
10,000 குவாட்ரில்லியன் மதிப்புள்ள 16 Psyche என்ற சிறுகோளை ஆய்வு செய்கிறது நாசா... ஆய்வு வெற்றியடைந்தால் உலகில் அனைவரும் கோடீஸ்வரர்களே...
புதுடெல்லி: தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்ட 16 Psyche செவ்வாய் மற்றும் வியாழன் இடையே சிறுகோள் குழுமத்தில் அமைந்துள்ள அளவில் சற்று பெரிய சிறுகோள் (asteroid) ஆகும். இது சுமார் 200 கிமீ அளவைக் கொண்டுள்ளது.
நாசா விரைவில் 16 சைக் என்ற பெரிய சிறுகோள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொள்ளப் போகிறது. இது பூமி என்ற கிரகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய அளப்பரிய செல்வங்களைக் கொண்டது.
சிறுகோளில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள், அதாவத் 10,000 குவாட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய உலோகஙகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பூமியில் உள்ள ஒவ்வொரு நபரையும் தொழில்நுட்ப ரீதியாக கோடீஸ்வர்ர்களாக மாற்றும். (டாலர் அடிப்படையில்).
தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்ட 16 Psyche செவ்வாய் மற்றும் வியாழன் இடையே சிறுகோள் குழுமத்தில் அமைந்துள்ள, அளவில் சற்று பெரிய சிறுகோள் (asteroid) ஆகும். இது சுமார் 200 கிமீ அளவைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் NASA சைக் மிஷன் குறித்த வீடியோவை வெளியிட்டது.
16 Psyche என்ற சிறுகோள் 17 மில்லியன் பில்லியன் டன் நிக்கல்-இரும்பைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தது என்று, நியூயார்க்கில் உள்ள Bernstein என்ற ஆராய்ச்சி நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தின் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானது ஆகும்.
16 Psyche என்ற சிறுகோளை அராயும் நாசா விண்கலம் சமீபத்தில் அதன் "முக்கியமான வடிவமைப்பு" கட்டத்தை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
“இந்த பணி அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தால் வழிநடத்தப்படுகிறது. நாசாவின் Jet Propulsion ஆய்வகம் பணி மேலாண்மை, செயல்பாடுகள் மற்றும் வழிசெலுத்தலுக்கு பொறுப்பாகும். விண்கலத்தின் solar-electric propulsion chassis, Maxar நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஒரு இமேஜர், மேக்னடோமீட்டர் மற்றும் gamma-ray ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய payload உருவாக்கப்படும் ”என்று நாசாவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நாசா தனது பணி மற்றும் நிகழ்வுகளுக்கான காலக்கெடு அட்டவனையை வழங்கியுள்ளது
மிஷன் காலவரிசை:
ஏவுதல்: 2022
சூரிய மின்சார பயணம்: 3.5 ஆண்டுகள்
16 Psyche க்கு செல்வது: 2026
அவதானிப்புக் காலம்: சுற்றுப்பாதையில்21 மாதங்கள் இருந்து, மேப்பிங் மற்றும் 16 Psycheஇன் பண்புகளை ஆய்வு செய்தல்
மிஷன் திட்டங்கள்: 2022 - புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Psyche விண்கலம் ஏவப்படும்.