See pic`s ஸ்டெர்லைட் போராட்டம் ஒரு பார்வை- ஐந்து பேர் பலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வெடித்தது போராட்டம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறி போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசினர். போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டு உள்ளார்.