திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்தினருடன் பயணித்த 9 வயது சிறுமிக்கு நள்ளிரவில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 9 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 


அந்த சிறுமி கதறி அழுது பெற்றோரை எழுப்பி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை சொன்னதும் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


காவல்துறை அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும், அவர் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதும் தெரியவந்ததது.